காங்கிரஸும், பாஜகவும் புருஷன் பொண்டாட்டி மாதிரி: கெஜ்ரிவால் தாக்கு
டெல்லி: பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கணவன், மனைவி போன்ற உறவு உள்ளது. அந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகின்றன என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தில் கட்சியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,

பாஜக-காங்கிரஸ்
பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கணவன், மனைவி போன்ற உறவு உள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் பாஜக-காங்கிரஸ். அவர்கள் ஒரு வீட்டுக்குள் சண்டைபோடும் கணவன், மனைவி போன்றவர்கள்.

ரகசியங்கள்
பாஜகவுக்கு காங்கிரஸின் ரகசியங்கள் தெரியும். காங்கிரஸுக்கு பாஜகவின் ரகசியங்கள் எல்லாம் தெரியும். பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் கோவாவில் உள்ள பல காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான ஆவணங்கள் உள்ளன என்று ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ்
மனோகர் பாரிக்கர் தன்னிடம் உள்ள ஆவணங்களை வைத்து சம்பந்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார். மாறாக அந்த ஆவணங்களை வைத்து அவர் காங்கிரஸை தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருப்பார்.

ஏமாற்றுகிறார்கள்
பாஜகவும், காங்கிரஸும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இரு கட்சிகளும் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கின்றன. இரண்டு கட்சிகளும் மாபியாக்கள். அவர்கள் மாபியா ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சி
தேர்தலில் போட்டியிட டிக்கெட்டை எதிர்பார்த்து யாரும் ஆம் ஆத்மி கட்சிக்கு வராதீர்கள். கட்சியில் அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். டிக்கெட் என்பது மற்றும் ஒரு பொறுப்பு.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications