மேகாலயாவில் தொங்கு சட்டசபை.. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ்!
மேகாலயா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
Recommended Video

ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் அம்மாநிலத்தில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை கைப்பற்றாததால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மேகாலயாவில் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 75 சதவீத வாக்குகள் பதிவானது.
வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குகள் எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

47 இல் பாஜக போட்டி
மொத்தம் 59 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி 59 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாஜக 47 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது.

என்பிபி பாஜக கூட்டணி
என்பிபி எனும் நாகா மக்கள் கட்சி 52 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. என்பிபியும் பாஜகவும் மத்தியிலும் மணிப்பூரிலும் கூட்டணியில் உள்ளன.

10 ஆண்டுகளாக காங்.
இந்நிலையில் மேகாலயா சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் எதிரெதிராக களம் கண்டன. மேகாலயா மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிதான் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது.

காங். அதிக இடங்களில்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்தக்கட்சி 59 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் 21 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

பாஜக 2 இடங்களில்
என்.பி.பி எனும் நாகா மக்கள் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. மற்றக்கட்சிகள் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

தொங்கு சட்டசபை
எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை கைப்பற்றாததால் மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அல்லது காங்கிரஸ், என்பிபி கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றும் அல்லது பாஜக, என்பிபி, மற்றும் மற்றவை கிங்மேக்கராக செயல்படலாம் என்றும் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications