கொரோனா வைரஸ் தடுப்பூசி: குழந்தைகளில் யாருக்கெல்லாம் போடலாம்? உலக நாடுகளின் நிலை என்ன?
16 - 17 வயதுள்ள எல்லா குழந்தைகளுக்கும் பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் 12 - 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
12 - 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து, ஓர் அறிக்கை தயார் செய்யுமாறு இங்கிலாந்தில் இருக்கும் தேசிய பொது சுகாதார சேவை அமைப்பிடம் கூறப்பட்டது.
யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி?
16 - 17 வயதுள்ள எல்லா குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் டோஸ் குறித்து இன்னும் எதுவும் திட்டமிடவில்லை.
கடுமையான நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் (இதில் செரிப்ரல் பால்சி, ஆட்டிசம் அல்லது எபிலிப்சி போன்றவைகளும் அடக்கம்) டவுன் சிண்ட்ரோம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், நோயெதிர்ப்பு மண்டலம் மோசமாக பலவீனமடைந்து இருப்பவர்கள், புற்றுநோய் உள்ள குழந்தைகளும் அடக்கம்.
பல்வேறு கற்றல் குறைபாடு உள்ளவர்கள் போன்ற மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளால் அபாய நிலையில் உள்ள 12 - 15 வயதான குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
ஒத்த வயதுள்ள, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்களோடு வாழும் குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
எந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது?
தற்போது ஃபைசர் தடுப்பூசி தான் வழங்கப்படுகிறது. மாடர்னா தடுப்பூசியும் குழந்தைகளுக்குச் செலுத்த பிரிட்டனில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா?
எந்த ஒரு மருந்தும் முழுமையாக பாதுகாப்பானது அல்ல. எல்லா மருந்துகளும் ஆபத்துகளும் நன்மைகளும் கொண்டதே.
ஃபைசர் தடுப்பூசி பாதுகாப்பானதாக இல்லை எனில் அதை பிரிட்டன் பயன்பாட்டுக்கு அனுமதித்திருக்காது.
- கொரோனா வைரஸின் எண்டமிக் நிலையை அடைந்துவிட்டதா இந்தியா? நிபுணர்கள் தரும் விளக்கம்
- என்னவானது கேரளாவின் கோவிட் தடுப்பு மாடல்'? - அதிர்ச்சிப் பின்னணி
ஃபைசர் தடுப்பூசியால் மிக அரிதாகவே இதய தசைகளில் அழற்சிகள் ஏற்படுகின்றன. இது இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்களுக்கு மத்தியில் பொதுவாக காணப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மருந்துகளை ஆய்வு செய்து அனுமதிக்கும், ஐரோப்பிய மருந்துவ முகமையோ, ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 10 லட்சம் பேரில் ஒன்று அல்லது இருவருக்கே இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறுகிறது. அப்படி பாதிக்கப்படுபவர்களும் முழுமையாக உடல் நலம் தேறிவிடுவதாகக் கூறியுள்ளது.
பிரிட்டனில் இருக்கும் எல்லா குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுமா?
12 - 15 வயதுக்கு உட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தத் தேவையான பணிகளைச் செய்யுமாறு இங்கிலாந்தில் இருக்கும் தேசிய சுகாதார சேவை அமைப்பிடம் கூறப்பட்டது. ஆனால் இதுவரை தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழுவில் இருக்கும் நிபுணர்களின் பரிந்துரைகளைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
நல்ல உடல் நலத்தோடு இருக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிக பலன் இல்லை என முன்பே கூறப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. காரணம், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் மிக மோசமான நோயால் பாதிக்கப்படுகிறார்கள் அல்லது இறக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால், பெரியவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளும் தெளிவில்லாமல் இருக்கிறது. காரணம் கொரோனாவால் பாதிக்கப்படக் கூடியவர்களில் பலருக்கும் ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.
பிரிட்டனில் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதுவரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
மற்ற நாடுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?
கனடா மற்றும் பிரேசில் உட்பட பல நாடுகளும், 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தீர்மானித்துள்ளது.
16 - 25 வயதுள்ளவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைப் போன்றே 12 - 15 வயதுள்ளவர்களுக்கும் மாற்றங்கள் ஏற்படுவதாக ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதால், கடந்த மே மாதமே ஐரோப்பிய யூனியன் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் செலுத்த ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கும் தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் ஏற்கனவே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தத் தொடங்கிவிட்டன.
12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அமெரிக்கா பரிந்துரைக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகு ஐ.எம்.எஸ் என்கிற அரிதான, ஆனால் ஆபத்தான நோயால் பாதிக்கப்படுவதைக் காரணமாகக் காட்டுகிறது அமெரிக்கா.
சீனாவில் வரும் அக்டோபர் மாதத்துக்குள் 12 - 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரு தடுப்பூசிகளும் ஆறு மாத குழந்தைக்குச் செலுத்தி பரிசோதனை மேற்கொண்டு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் எத்தனை குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்?
கிட்டத்தட்ட எல்லா குழந்தைகள் மற்றும் இளைஞர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு தான்.
கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, இங்கிலாந்தில் முதல் 12 மாதங்களில் 25 குழந்தைகள் மட்டுமே இறந்திருப்பதாக தரவுகள் கூறுகின்றன.
அப்படி இறந்தவர்களில் பலருக்கும், மிக கடுமையான உடல் நலக் கோளாறுகள் இருந்ததாகவும், சிக்கலான நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததாகவும் கூறுகிறது தரவுகள்.
இறந்தவர்களில் ஆறு பேருக்கு மட்டுமே எந்த வித உடல் நலக் கோளாறுகளும் இருந்ததாக பதிவுகள் இல்லை.
பிற செய்திகள்:
- பிக்பாஸ் சீசன் 5: கமல் நிகழ்ச்சி புதிய சவால்களுக்கு தாக்குப்பிடிக்குமா?
- திமுக சின்னத்தில் போட்டி - எதிர்கட்சி வரிசையில் இருக்கை - நீதிமன்றம் சென்ற வழக்கு தெரியுமா?
- 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற கணவர்
- ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள்
- அமெரிக்காவின் தாக்குதலில் குழந்தைகள் பலி: கண்ணீர் வடிக்கும் குடும்பம்
- கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு இதய பாதிப்பு - அறிகுறிகள் என்னென்ன?
- மூக்குதான் மூலதனம்: பல்லுயிர் பெருக்கத்தை காக்க போராடும் மோப்ப நாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி

















Click it and Unblock the Notifications