For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா நோயாளிகளுக்கு கோமியம் கொடுத்து சிகிச்சை.. குஜராத்தில் கோசாலையில் திறக்கப்பட்ட தடுப்பு மையம்

Google Oneindia Tamil News

காந்தி: குஜராத்திலுள்ள ஒரு கிராமத்தில் கொரோனா நோயாளிகளுக்குப் பசு கோமியம் மற்றும் பாலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் போலவே குஜராத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கிரமங்களில் கண்டறியப்படும் கொரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்த அங்கேயே தனிமைப்படுத்தும் முகாம்களை அமைக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

Covid care center inside gaushala with medicines from cow milk, urine

இந்நிலையில், வடக்கு குஜராத்திலுள்ள டெடோடா என்ற கிராமத்தில் கோசாலையில் கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்குப் பசு பால், நெய் மற்றும் கோமியத்திலிருந்து செய்யப்பட்ட ஆயுர்வேத மருந்து தரப்படுவதாகக் கோசாலை அறங்காவலர் மோகன் ஜாதவ் தெரிவித்தார்.

சுடுகாட்டிலிருந்து துணிகளை திருடி.. புதிய ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் விற்பனை.. உ.பி-இல் செம ஷாக்சுடுகாட்டிலிருந்து துணிகளை திருடி.. புதிய ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் விற்பனை.. உ.பி-இல் செம ஷாக்

லேசான கொரோனா பாதிப்பு உடையவர்களுக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நோயாளிகளுக்கு முக்கியமாகப் பசுவின் கோமியம் மற்றும் சில மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தப் பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கோசாலையில் அமைந்துள்ள இந்த கொரோனா தடுப்பு மையத்தில் தற்போது ஏழு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க இரண்டு ஆயுர்வேத மருத்துவர்களும் இரு எம்பிபிஎஸ் மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

English summary
Ayurvedic medicine from cow milk, urine for Corona patients
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X