60 வேட்பாளர்களை அறிவித்தது சிபிஐ- தமிழகத்திற்கு யாரையும் அறிவிக்கவில்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அது அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு அக்கட்சி போட்டியிட்ட இடங்களுக்குத்தான் தற்போது பெரும்பாலும் வேட்பாளர்களை அது அறிவித்துள்ளது.

cpi

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையிலும், அதன் முதல் வேட்பாளர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம் பெறவில்லை. இதனால் அது திமுக கூட்டணிக்கு முயலுகிறதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

அதேபோல ஆந்திராவுக்கும் வேட்பாளர் யாரையும் அது அறிவிக்கவில்லை. தமிழக வேட்பாளர்கள் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி கூறுகையில், திங்கள்கிழமை தமிழக வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இந்திய கம்யூனிஸ்ட் இணைந்து போட்டியிட்டாலும் கூட ஆந்திரா, பீகாரில் அவை தனித் தனியாக போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளில் மேற்கு வங்கத்தில் 3, பீகார், கேரளாவில் 2, சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மணிப்பூரில் தலா ஒரு தொகுதியும் அடக்கம்.

பஞ்சாபில் 4, ஒடிஷா, மகாராஷ்டிராவில் தலா 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது சிபிஐ

பீகாரில் இக்கட்சி ஐக்கிய ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+