Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CPI-யில் பெரிய மாற்றம்? இளைஞர்கள் - பெண்கள் கைகளுக்கு செல்லும் அதிகாரம்? மேலிடத்துக்கு ‛டிமாண்ட்'

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: கட்சியில் மூத்த தலைவர்கள் ஆதிக்கம் செய்வது, பதவிகளை தங்களுக்கான தனிப்பட்ட உரிமையாக கருதுவது, ஆண்களால் மட்டுமே பதவிகளை திறம்பட நிர்வகிக்க முடியும். பெண்களால் முடியாது என்ற மனநிலை இருப்பது, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி வழங்க மறுப்பது உள்ளிட்டவை கட்சிக்கு பின்னடைவாக உள்ளது. அதேபோல் சிலர் தங்களின் சுயலாபத்துக்காக செயல்பட்டு சொத்துகளை குவிக்கின்றனர். இது சரிசெய்யப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படுகிறதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது காங்கிரஸ் சண்டிகரில் தொடங்கி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உள்பட ஒவ்வொரு மாநிலங்களின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2வது நாளாக கூட்டம் நடந்தது.

cpi-organisational-report-says-that-calling-for-change-and-slams-dominated-by-older-individuals-is-c

2வது நாளான நேற்றைய தினம் கட்சியின் அமைப்பு சார்ந்த வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கட்சியின் செயல்பாடு, கட்சியின் நிர்வாகிகள் நியமனம் உள்பட பல்வேறு விவகாரங்கள் பற்றி அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையில் கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.

அதன்படி, சில மூத்த தலைவர்கள் தொடர்ந்து கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் அதிகாரமிக்க பதவிகளை தனிப்பட்ட உரிமை என்று நினைத்து தக்க வைத்து கொள்கின்றனர். அதேபோல் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது இல்லை. ஆண்கள் மட்டுமே பதவிகளில் சிறப்பாக செயல்பட முடியும் என்று பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவது இல்லை.

கட்சியில் ஆணாதீக்க மனநிலை உள்ளது. ஆண்கள் மட்டுமே புரட்சியாளர்களாக இருக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. இதனால் பெண்கள் தலைமை பதவிகளில் இருந்து ஓரம்கட்டப்படுகிறார்கள். இது கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் கட்சி தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றால் இந்த பிற்போக்குத்தனமான கருத்தை துடைத்தெறிய வேண்டும்.

அனைத்து சட்டசபை சார்ந்த அமைப்புகளிலும் பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை நாம் வழங்க வேண்டும். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு கோரும் நாம் கட்சியிலும் எத்தனை பெண்கள் முக்கிய பதவிகளில் உள்ளனர் என்பதை சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். குறிப்பாக கீழ் மட்டங்களில் பெண்கள் இல்லை என்பதால் மேல்மட்ட பதவிகளிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற சாக்குப்போக்கை இனி வேண்டாம்.

சில தோழர்கள் நீண்டகாலமாக ஒரே பதவியில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கட்சிக்கு எந்த பங்களிப்பையும் செய்வது இல்லை. மாற்றம் என்பது கட்சியில் நிச்சயம் தேவை. கட்சி மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தனிப்பட்ட ஆதாயத்துக்காக இருப்பது போல் செயல்படுகின்றனர். சிலர் பொறுப்புகளில் இருந்து வெளியேறும் சூழல் வரும்போது கட்சியை விட்டு செல்வதாக அச்சுறுத்துகிறார்கள். சிலர் பணம் மற்றும் புகழுக்கு மயங்கி சொத்துகளை சேர்க்கின்றனர். இது பணக்கார வர்க்க போக்காக உள்ளது.

தலைமை பதவிகளில் இளைஞர்கள், பெண்களுக்கு இடமளிக்க வேண்டும். ஏனென்றால் கட்சி மட்டங்களில் பொறுப்புகளில் உள்ளவர்களின் சராசரி வயது 60யை நெருங்குகிறது. இதனை சரிசெய்ய வேண்டும். சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட பிரிவினர்களுக்கு கட்சியிலும் உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை. அதனை சரிசெய்ய வேண்டும்.

அதேபோல் விசுவாசத்தின் அடிப்படையில் தலைவர்கள் நியமனம் செய்யப்படக்கூடாது. விமர்சனம் என்ற பெயரில் கட்சியில் உள்ள ஒருவரை மீண்டும் மீண்டும் குறிவைக்க கூடாது. தனிதனி கோஷ்டியாக செயல்படுவதை கைவிட வேண்டும். சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

அதேவேளையில் சமூக வலைதளங்கள் மூலமாக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும். சமூக வலைதளங்களில் நாம் நம் இருப்பை அதிகரிக்க வேண்டும். சமூக வலைதள கட்டமைப்பை பலமாக கட்டியெழுப்ப வேண்டும். இல்லாவிட்டால் எதிரிகள் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் விரைவில் வயதானவர்களுக்கு பதிலாக இளைஞர்கள், பெண்களுக்கு பதவிகள் வழங்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் அதில் காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பரந்த மனப்பான்மை இருந்திருந்தால் கடந்த 2024 சட்டசபை தேர்தலில் ‛இந்தியா' கூட்டணி பெரிய சாதனை வெற்றியை பெற்றிருக்கலாம். ‛இந்தியா' கூட்டணியின் பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ் சிறிய மதசார்பற்ற மற்றும் ஜனநாயக அமைப்புகளை நன்றாக அணுகியிருந்தால் அந்த வெற்றி சாத்தியமாகி இருக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+