இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வாழ்க்கை முறைதான் இந்துத்துவா: மோகன் பகவத்
புவனேஸ்வர்: இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வாழ்க்கை முறைதான் இந்துத்துவா என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஒடிஷாவின் கட்டாக்கில் ஒடியா மொழி வார இதழின் பொன்விழா நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:
இங்கிலாந்தில் வாழ்பவர்களை ஆங்கிலேயர்கள் என்கிறோம்.. ஜெர்மனில் வாழ்பவர்களை ஜெர்மானியர்கள் என்கிறோம்.. அமெரிக்காவில் வாழ்பவர்களை அமெரிக்கர்கள் என்கிறோம்.

ஆனால் இந்த இந்துஸ்தானில் வாழ்பவர்களை ஏன் இந்துக்கள் என்று அழைப்பதில்லை? கலாச்சார அடிப்படையில் இந்துத்துவா என்ற பெயராலேயே இந்தியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இந்துத்துவா என்பது வாழ்க்கை முறை. இந்துக்கள் என கூறப்படுபவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த கடவுளை வேண்டுமானாலும் வழிபடலாம்.
கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களாக கூட இருக்கலாம். விவேகானந்தர் கூறியதை போன்று கடவுளை வழிபடாதவன் நாத்திகவாதி அல்ல; சுய நம்பிக்கை இல்லாதவனே உண்மையான நாத்திகவாதி.
ஆதிகாலம் முதல் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர்களை ஒருங்கிணைத்திருப்பது இந்துத்துவா மட்டும் தான் என உலகம் தற்போது உணர்ந்து கொண்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் உள்ள சிலர் மட்டும் அதனை புரிந்து கொள்ளாமலும், தவறாக புரிந்து கொண்டும் மத பேதங்களை ஏற்படுத்துகின்றனர். உலகெங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது.
அந்த இருளில் இருந்து விடுபடுவதற்கான தீர்வும் ஆறுதலும் இந்தியாவில் தான் உள்ளது என உலகம் உணர்ந்து கொள்ள துவங்கி உள்ளது.
ஏனெனில் இன்று வரை இந்தியா வாழ்க்கை நெறிகளின் அடிப்படையிலும். கலாச்சார அடிப்படையிலும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வாழ்க்கை தர்மத்தை அனைவரும் புரிந்து கொண்டால் உலகம் தொடர்ந்து இந்தியாவை மதிக்கும்.
ஆனால் அந்த தர்மம் இந்த நாட்டை விட்டு சென்று விட்டால் இந்த நாடு பிளவுபட்டு அழிவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க
முடியாது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications