For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டென்மார்க் பெண்ணுக்கு வாக்கு இல்லை, அதனால் அவரது பலாத்காரம் ஆம் ஆத்மிக்கு பெரிதல்ல: காங். எம்.பி.

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி ரயில் நிலையம் அருகே பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட டென்மார்க் பெண் வாக்காளர் இல்லை என்பதால் அவரது விவகாரம் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிதாக தெரியவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீக்சித் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் ஆட்சி செய்யும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

Congress MP Sandeep Dikshit

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் மாணவி ஒருவர் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பூதாகரமாக வெடித்து அனைத்து கட்சிகளும் காங்கிரஸை தாக்கிப் பேசின. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு டெல்லி ரயில் நிலையம் அருகே டென்மார்க்கைச் சேர்ந்த 51 வயது பெண் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சியை தாக்கிப் பேசியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி.யும் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித்தின் மகனுமான சந்தீப் தீக்சித் கூறுகையில்,

இந்த பலாத்கார விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சி பெரிதாக எடுத்துக் கொள்ளாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த டென்மார்க் பெண்ணுக்கு டெல்லியில் ஓட்டு இல்லை என்பதால் தான் அதை கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். 2012ம் ஆண்டில் நடந்த பலாத்காரத்தை கண்டித்து நடந்த போராட்டங்களில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்றது உடகங்களின் பார்வையை பெறத் தான் என்றார்.

English summary
Congress MP Sandeep Dikshit told that Aam Admi party doesn't make an issue of Danish woman's rape as she does not have a vote in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X