Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்படி, எந்த நாளில் சாகலாம்.. கடிதத்தில் இருந்த 10 குறிப்புகள்.. உறைய வைக்கும் டெல்லி மர்ம மரணம்

டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அமானுஷ்யமான கடிதம் ஒன்று சிக்கி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்லி 11 பேர் தற்கொலை..வீடியோ

    டெல்லி: டெல்லியில் 11 பேர் மர்ம மரணத்தில் கிடைத்த கடிதத்தில் உறைய வைக்கும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. இதில் எப்படி தற்கொலை செய்ய வேண்டும் என்று 10 குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.

    எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் உள்ளது. டெல்லி புராரி பகுதியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டில் உள்ளே 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

    இவர்கள் வீட்டில் நிறைய கடிதங்கள், டைரிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. எப்படி தற்கொலை செய்தால் சொர்க்கத்தை அடையலாம், என்ன செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றெல்லாம் நிறைய குறிப்புகள் இருந்துள்ளது.

    கிழமை

    கிழமை

    அதில் முதல் குறிப்பில், எந்த நாளில் சாக வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும், செவ்வாய் கிழமை, ஞாயிற்றுக் கிழமை சாவிற்கு உகந்த நாள் என்றுள்ளது. இரண்டாவது குறிப்பில், ஆடைகள் சரியாக போடப்பட்டு இருக்க வேண்டும். உடலில் ஒரு சிறிய பாகம் கூட தெரிய கூடாது. முகத்தை கூட துப்பட்டாவால் மூட வேண்டும் என்றுள்ளது.

    சடங்கு

    சடங்கு

    மூன்றாவது குறிப்பில், கடைசி நாளுக்கு முன்பு 7 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். சடங்குகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இதற்கு இடையில் ஆத்மா வெளியே வந்தால், உடனடியாக சாக வேண்டும் என்றுள்ளது.
    நான்காவது குறிப்பில்நிற்க முடியாத மூதாட்டியை பக்கத்து அறையில் கொலை செய்ய வேண்டும் என்றுள்ளது. ஐந்தாவது குறிப்பில், மிகவும் குறைந்த வெளிச்சம் உள்ள விளக்குகளை பயன்படுத்த வேண்டும் என்றுள்ளது.

    கண்களை கட்ட வேண்டும்

    கண்களை கட்ட வேண்டும்

    ஆறாவது குறிப்பில், கடைசியில் துணி மிச்சம் இருந்தால், அதை கண்களை கட்ட பயன்படுத்த வேண்டும் என்றுள்ளது. ஏழாவது குறிப்பில் வாயை கட்டி இருக்கும் துணி மிகவும் இறுக்கமாக இருக்க வேண்டும் என்றுள்ளது. எட்டாவது குறிப்பில், இதில் எவ்வளவு ஆர்வமாக செய்கிறோமோ அவ்வளவு பலன் கிடைக்கும் என்றுள்ளது.

    ஒரே எண்ணம்

    ஒரே எண்ணம்

    ஒன்பதாவது குறிப்பில், இந்த சடங்கு கண்டிப்பாக 12 மணியில் இருந்து 1 மணிக்குள் நடக்க வேண்டும். அதற்கு முன் பெரிய பூஜை செய்ய வேண்டும் என்றுள்ளது. கடைசியாக, இதை செய்யும் எல்லோரும் ஒரே எண்ணத்துடன் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே சரியான பலன் அளிக்கும் என்றுள்ளது. இந்த குறிப்புகளை பார்க்கும் போது, இது நரபலியாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+