விபசாரம் நடத்தி ரூ.250 கோடி சம்பாதித்த கணவன்-மனைவி.. 4000 பெண்கள் வாழ்க்கை நாசம்
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் இளம்பெண்களை கடத்தி அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக விற்பனை செய்ததன் மூலம் டெல்லியைச் சேர்ந்த தம்பதி ரூ.250 கோடியை சம்பாதித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெள
டெல்லி: பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை கடத்தி விபசாரத்துக்காக விற்றதன் மூலம் டெல்லி தம்பதி மிகக்குறுகிய காலத்தில் ரூ.250 கோடி வரை சம்பாதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் கோபித்து கொண்டு மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பெண்கள், வேலைவாய்ப்பு தேடும் பெண்கள், ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் ஆகியோரை குறிவைத்து அவர்களை கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது.
இவ்வாறு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தப்படும் பெண்கள், வங்கதேசம் வழியாக வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதும் தெரியவந்தது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக உளவுத்துறையினர் கண்டறிந்தனர்.

விபசார கும்பல்
இந்த கடத்தல் கும்பலை பிடிப்பதற்காக நாடு முழுவதும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது டெல்லியைச் சேர்ந்த தம்பதியான அபக் உசேன், சாய்ரா பேகம் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, அவர்கள் பெண்களை கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்துவதையும், விற்பனை செய்வதையும் மிகப்பெரிய தொழிலாக மேற்கொண்டு வருவதும் தெரியவந்தது.

புரோக்கர்கள் நியமனம்
கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம்பெண்களை கடத்தி விபசாரத்துக்காக மற்றவர்களிடம் விற்பனை செய்து இருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு பெண்ணையும் விற்கும் போதும் லட்சக்கணக்கில் பணம் கிடைத்ததால், ருசி கண்ட அத்தம்பதி நாளாக நாளாக, நாட்டின் பல பகுதிகளிலும் புரோக்கர்களை நியமனம் செய்து பெண்களை கடத்தி விற்கும் தொழிலை விரிவுபடுத்தியுள்ளனர்.

ரூ.250 கோடி
இதன் மூலம் அவர்கள் மிகக்குறுகிய காலத்தில் ரூ.250 கோடி வரை சம்பாதித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பணத்தை கொண்டு டெல்லி புறநகர் பகுதியில் பெரிய பண்ணை வீடும் வாங்கி, உயர் ரக கார்களில் வலம் வந்ததும் தெரியவந்தது.

தம்பதிகள் தொழில்
ஹைதராபாத்தைச் சேர்ந்த அபக் உசேன், டெல்லி சென்று ஒரு நிறுவனத்தில் ரூ.3 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு விபசாரத்தில் ஈடுபட்டிருந்த உத்தரபிரதேச மாநிலம் மொரதாபத்தைச் சேர்ந்த சாய்ரா அறிமுகம் ஆனார். கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும் சேர்ந்தே இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பெண்களை கடத்தியதால் சம்பாதித்ததன் மூலம் வாங்கிய 18 பங்களாக்கள், 5 கார்கள் முடக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications