For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரத்து செய்யப்பட்ட மீட்டிங்.. எங்குமே செல்லவில்லை.. சைலன்ட் மோடிற்கு சென்ற அமித் ஷா.. என்னாச்சு?

டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து பாஜகவின் மூத்த தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைதியாக இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக சரிய மத அரசியலே காரணம்.. வெறுப்பு அரசியல் எடுபடவில்லை.. தமிழக ஆம் ஆத்மி அதிரடி - ஆடியோ

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து பாஜகவின் மூத்த தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைதியாக இருக்கிறார். டெல்லி தேர்தல் குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    நேற்று டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக 8 இடங்களில் வென்றது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லாமல் எப்படி தோல்வி அடைந்ததோ அதேபோல்தான், பாஜகவும் மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. பாஜக வெறும் 7 இடங்களில் மட்டும் வென்றது அக்கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    ஷீலா தீட்சித் இருந்தால் இப்படி ஆகி இருக்குமா? 63 இடத்தில்.. நினைத்து பார்க்க முடியலையே.. சோனியா ஷாக்ஷீலா தீட்சித் இருந்தால் இப்படி ஆகி இருக்குமா? 63 இடத்தில்.. நினைத்து பார்க்க முடியலையே.. சோனியா ஷாக்

    எப்படி

    எப்படி

    இந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் பாஜகவின் முன்னாள் தேசிய தலைவரும், பாஜகவின் தற்போதைய பிக் பாஸுமான உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைதியாகி விட்டார். நேற்று காலையில் இருந்து அமித் ஷா சைலன்ட் மோடில்தான் இருக்கிறார். தேர்தல் தோல்வி குறித்து அவர் யாரிடமும் பேசவில்லை. செய்தியாளர்கள், கட்சி நிர்வாகிகள் யாரிடமும் அமித் ஷா டெல்லி தேர்தல் குறித்து பேசவே இல்லை.

    பாஜக தோல்வியை

    பாஜக தோல்வியை

    நேற்று டெல்லி தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்று நம்பவில்லை. ஆனால் குறைந்த பட்சம், 20+ இடங்களில் வெல்லும் என்று நம்பியது. ஆனால் பாஜகவின் நம்பிக்கை தவிடு பொடியானதுதான் மிச்சம். ஆம் பாஜக இரட்டை இலக்கங்களில் கூட வெற்றிபெறவில்லை. இதுதான் அமித் ஷாவை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அமித் ஷா சைலன்ட் மோடிற்கு சென்றதற்கு இதுவே காரணமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

    மீட்டிங் ரத்து

    மீட்டிங் ரத்து

    இன்னொரு பக்கம் நேற்று அமித் ஷா நேற்று பாஜக தலைவர்களை சந்திப்பதாக இருந்தது. டெல்லியை சேர்ந்த 7 பாஜக எம்பிக்களை சந்தித்தது அவர் ஆலோசனை செய்வதாக இருந்தது. நேற்று மாலை இதற்கான மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் டெல்லி தேர்தல் தோல்வி காரணமாக இந்த மீட்டிங் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. பாஜக டெல்லி எம்பிக்களை இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    செல்லவில்லை

    செல்லவில்லை

    நேற்று அமித் ஷா தேர்தல் தோல்விக்கு பின் எங்கும் செல்லவில்லை. கட்சி மீட்டிங் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அமைச்சரவை தொடர்பான மீட்டிங் எதிலும் கலந்து கொள்ளவில்லை. ஜே பி நட்டாவிடம் தேர்தல் தோல்வி குறித்து பேசி இருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஜே பி நட்டாவும் நேற்று வெளியே வரவில்லை. அவர் டெல்லி தேர்தல் தோல்வி குறித்து டிவிட் மட்டும்தான் போட்டார்.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    டெல்லி தேர்தலுக்காக பாஜகவில் அமித் ஷாதான் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். லோக்சபா தேர்தல் அளவிற்கு இதில் கடுமையாக அவர் பிரச்சாரம் செய்தார். தினமும் ஒவ்வொரு தொகுதியில் கூட்டம் போட்டார். 2019 லோக்சபா தேர்தலுக்கு கூட, அமித் ஷா இப்படி பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் இப்படி பிரச்சாரம் செய்தும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

    யார் பொறுப்பு

    யார் பொறுப்பு

    இந்த நிலையில் பாஜகவின் தோல்வியை தற்போது டெல்லி பாஜகவின் தனிப்பட்ட தோல்வியாக வெளிப்படுத்தி வருகிறார்கள். டெல்லி பாஜகவின் மனோஜ் திவாரி தோல்விக்கு பொறுப்பேற்றுள்ளார். அதேபோல் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், கம்பீர் போன்றவர்கள் வெளியே வந்து தோல்வி குறித்து பேசி உள்ளனர். நாங்கள்தான் சரியாக செயல்படவில்லை என்பது போல தோல்வியை பொறுப்பேற்றுள்ளனர்.

    English summary
    Delhi Election Result: Big Boss Amit Shah went to silent mode after losing in the capital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X