டெல்லி மர்ம மரணம்.. குடும்பத்தை தற்கொலைக்கு தூண்டியது நான்தான்.. சாமியார் கீதா மா பரபரப்பு பேட்டி
டெல்லியில் 11 பேர் இறந்த விஷயத்தில், புதிய திருப்பமாக அந்த குடும்பத்தை தான்தான் தற்கொலைக்கு தூண்டினேன் என்று இந்து பெண் சாமியார் கீதா மா பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் 11 பேர் இறந்த விஷயத்தில், புதிய திருப்பமாக அந்த குடும்பத்தை தான்தான் தற்கொலைக்கு தூண்டினேன் என்று இந்து பெண் சாமியார் கீதா மா பேட்டியளித்துள்ளார். போலீஸ் அவரை தற்போது கைது செய்துள்ளது.
டெல்லி புராரி பகுதியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டில் போலீஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் உள்ளது. எதோ ஒரு மத சடங்கிற்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.

தற்கொலைக்கு தூண்டினார்
கீதா மா என்ற இளம் இந்து சாமியார் பெண்தான், இந்த தற்கொலைக்கு காரணம் என்று அவரே போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இவரை போலீஸ் எப்படி பிடித்தது, என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த பெண், தற்கொலைக்கு தூண்டியதை அந்த வீடியோவில் ஒப்புக்கொண்டுள்ளார்.

யார் இவர்
புராரி வீட்டில் வேலை பார்த்த ஒப்பந்ததாரர் ஒருவரின் மகள்தான் கீதா. கீதாவின் தந்தை அந்த குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அதன்மூலம் பெரிய சாமியார் ஆக நினைத்துக் கொண்டு இருந்த, கீதா அந்த குடும்ப உறுப்பினர்களிடம் பேசியுள்ளார். இப்படித்தான் இவர்களுக்கு கீதாவின் அறிமுகம் கிடைத்துள்ளது.

வீடியோ
போலீசுக்கு கீதா அளித்த பேட்டி வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு கெட்ட பழக்கம் இருந்ததாக கூறியுள்ளார். எல்லோரும் தவறான எண்ணங்களுடன் இருந்தனர். எதிர்மறையான எண்ணங்களை கொண்டு இருந்தனர். அதனால் பூஜை செய்ய வேண்டும் என்று கூறினேன். அவர்கள் வீட்டில் புனித சக்தியை உருவாக்க திட்டமிட்டேன்.

குழாய் வைக்க
அந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த 11 குழாய் இருந்தது குறித்தும் அவர் பேசியுள்ளார். அதன்படி அந்த 11 குழாய்களை தன்னுடைய அறிவுறுத்தலின் பேரில், அவரது அப்பாதான் அந்த வீட்டில் பொறுத்தியுள்ளார், அந்த வீட்டை கட்ட உதவியதே தன்னுடைய அப்பாதான் என்று கீதா பேட்டியளித்துள்ளார்.

ஆவி
அந்த வீட்டில் நிறைய கெட்ட ஆவி இருந்தது. அதை வீட்டை விட்டு வெளியே அனுப்பத்தான் இந்த பூஜை செய்ததாக கூறியுள்ளார். இதனால் தற்போது கீதா போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications