டெல்லியில் 72 மணிநேரத்தில் 3 பெண்கள் பலாத்காரம்: 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 72 மணிநேரத்தில் 16 வயது சிறுமி உட்பட 3 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியத்தலைநகர் டெல்லி பாலியல் பலாத்காரத்தில் தலைநகரமாக மாறிவருகிறது. சல்மார்பாக் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமையன்று 16 வயது பள்ளிச் சிறுமி அவளது பள்ளித் தோழர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். போலீசில் அளித்த புகாரை அடுத்து சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் டெல்லியின் புறநகர் பகுதியில் டிக்கெட் புக்கிங் செய்யும் நிறுவனத்தின் அதிபர் 27 வயதான பெண் அலுவலக ஊழியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று டிக்கெட் புக்கிங் செய்யும் வேலை அதிகமாக இருந்த காரணத்தினால் இருவர் வேலை பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அவர்களுடன் நிறுவனத்தின் உரிமையாளரும் இருந்துள்ளார். நேரம் அதிகமாகவே குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்துவிட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் 27 வயதான பெண் ஒருவரை கத்திமுனையில் மிரட்டி 4 பேர் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெண்ணின் கணவர் மத்திய பிரதேச மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார்.

டெல்லியில் கடந்த 72 மணிநேரத்தில் மூன்று பெண்கள் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+