ஆர்கே.நகர் தேர்தல் ரத்து விவகாரம்: ஆளுநருடன் திமுகவினர் இன்று சந்திப்பு!
ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக திமுகவினர் இன்று ஆளுநரை சந்திக்கவுள்ளனர்.
மும்பை: ஆர்கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுகவினர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மும்பையில் இன்று சந்திக்கவுள்ளனர். ஆர்கே.நகரில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் புயல் வேகத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் வருமானவரித்துறையினர் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட் அதிமுக முக்கிய நிர்வாகிகள் வீட்டில் திடீர் ரெய்டு நடத்தினர். இதில் ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம்கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின.
இந்த சோதனை தொடர்பான அறிக்கையை தமிழக தேர்தல் அலுவலர்களிடம் வருமான வரித்துறையினர் வழங்கினர். இதையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதையடுத்து, ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.
தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுகவின் முதன்மை செயலர் துரைமுருகன், அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் மும்பையில் இன்று நேரில் சந்திக்க உள்ளனர்.
அப்போது ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications