தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரதியுஷா 2 மாத கர்ப்பம்...?
மும்பை: தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை பிரதியுஷா இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தி சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை பிரதியுஷா. இவர் நடித்த இந்தி சீரியல் ஒன்று மண்வாசனை என்ற பெயரில் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்தவாரம் வெள்ளிக்கிழமையன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் பிரதியுஷா.

காதல் விவகாரம்...
காதலருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரதியுஷாவின் காதலர் ராகுலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணப்பிரச்சினை...
ஆனால், பிரதியுஷா பணப்பிரச்சினையில் சிக்கித் தவித்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ராகுலின் உறவினர்கள் கூறிவருகின்றனர்.

கர்ப்பம்?
இது ஒருபுறம் இருக்க, தற்கொலை செய்து கொண்ட போது, பிரதியுஷா இரண்டு மாத கர்ப்பமாக இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திசு பரிசோதனை அறிக்கை...
அதாவது, பிரதியுஷாவின் பிரேதப் பரிசோதனையில் அவரது கருப்பையில் தடித்த வெள்ளைநிற திரவம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அவர் கர்ப்பமாக இருந்தார் என கருதப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அவரது திசு பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் எதையும் உறுதி செய்ய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் விசாரணை...
தொடர்ந்து பிரதியுஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தெளிவில்லாத நிலை காணப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து பிரதியுஷா கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இதனால், பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டபோது, கர்ப்பமாக இருந்தார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவு...
இதற்கிடையே போலீசாரின் விசாரணையின் போது, ராகுலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications