"இந்தியாவில் பட்டினியால் சாவதை விட போரில் சாவது மேலானது" இஸ்ரேல் பணிக்காக குவிந்த ஹரியானா இளைஞர்கள்
சண்டிகர்: இஸ்ரேல் நாட்டில் சென்று கட்டுமான வேலை பார்ப்பதற்கான வேலைவாய்ப்பு முகாம் ஹரியானாவில் நடந்தது. இதில், கலந்துகொண்ட இளைஞர்கள், "இந்தியாவில் பட்டினியால் சாவதை விட போரில் சாவது மேலானது" என்று கூறியுள்ளனர்.
ஹரியானாவில் அரசு சார்பில் நடத்தப்படும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இஸ்ரேலில் கட்டுமான தொழிலில் ஈடுபடும் பணியாளர்களை தேர்வு செய்யப்பட்டனர். ஹரியானவில் உள்ள மஹரிஷி தயானந்த் பல்ககைக்கழகத்தில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாஸ்டர் டிகிரி வரை முடித்த இளைஞர்களும் அணி வகுத்து நின்றனர்.

அந்த வகையில், வேலை தேடி வந்து இருந்த ஜிதேந்தர் சிங், இந்தியாவில் பட்டினியால் சாவதை விட போரில் சாவது மேலானது என்று என்று இங்குள்ள வேலை வாய்ப்பின்மை பற்றி பட்டவர்த்தனமாக கூறினார். இது தொடர்பாக ஜிதேந்தர் சிங் கூறுகையில், "ஹரியானாவில் வேலை வாய்ப்பு மோசமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்தததுதான். இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்புடன் போர் நடைபெற்று வருகிறது.
இதனால் உள்ள அச்சுறுத்தல் பற்றி நான் நன்கு அறிவேன். இருந்தாலும் பட்டினியால் இங்கு சாவதை விட இஸ்ரேலில் வேலை செய்து கொண்டு சாவது எவ்வளவே மேல்" என்றார். ஜிதேந்தர் சிங் ரன்பீர் சிங் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதேபோல், நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள மற்றொரு இளைஞர் கூறுகையில், வெளிநாட்டில் எங்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசுதான் பொறுப்பு என்று எங்களிடம் உறுதி அளித்து இருக்கிறார்கள்" என்றார்.
இதற்கிடையே, நேர்முகத்தேர்வுக்கு வந்த சில இளைஞர்கள், வேலை கிடைப்பதை உறுதி செய்ய ரூ.1.5 லட்சம் வரை சில ஏஜெண்ட்கள் கேட்பதாகவும் குற்றம் சாட்டினார். ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் இருந்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்ககா வந்த மனிஷ் குமார் என்ற இளைஞர் கூறுகையில், "இஸ்ரேலில் கட்டுமான பணியில் ஈடுபடும் வேலைக்காக என்னை எனது ஏஜெண்ட் இங்கு அனுப்பினார். 1.5 லட்சம் பெற்றுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications