தேர்தல் ஆணையத்தை மதிக்கவில்லை.. தடையை மீறி பிரச்சாரம் செய்த சாத்வி.. மீண்டும் நோட்டீஸ்!
தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால் தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் உள்ளது.
போபால்: தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால் தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் உள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்த பாஜக போபால் வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குருக்கு தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடை விதித்தது. 72 மணி நேரம் அவர் பிரச்சாரம் செய்ய கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலை இந்த தடை விதிக்கப்பட்டது. இன்று இரவு 12 மணியோடு இந்த தடை முடிகிறது. நாங்கள்தான் பாபர் மசூதியை இடித்தோம். நான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன். பாபர் மசூதியின் மேல் ஏறி நான் அதை இடித்தேன் என்று இவர் கூறியதற்காக இந்த தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இவர் இந்த தடையை மீறி பிரச்சாரம் செய்து இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் போபாலில் சில இடங்களில் தடையை மீறி பேசி இருக்கிறார். இதனால் இவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால் தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் உள்ளது.
மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பவர்களில் ஒருவர்தான் இந்த சாத்வி பிரக்யா தாக்குர். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications