தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடைவிதிக்க முடியாது: தேர்தல் ஆணையம்
டெல்லி: தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடைவிதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சட்டசபை, லோக்சபா தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து ஊடகங்கள் கருத்துக்கணிப்புகள் வெளியிடுவதும், ஒளிபரப்புவதும் வழக்கம். ஆனால் வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த தடையை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாள் முதல், இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
கடந்த 2004-ம் ஆண்டு அரசுக்கு அனுப்பப்பட்ட இந்த பரிந்துரை தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்தநிலையில் தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தன.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி மீண்டும் இந்த பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப் பரிந்துரையை தேர்தல் சீர்திருத்த சட்டக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பியது.
பின்னர், தற்போதைய சூழ்நிலையில் கருத்துக்கணிப்புகளை தடை செய்வது குறித்து சட்டம் எதுவும் இயற்ற முடியாது என அறிவித்த மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கும் விதி 324-ன் அடிப்படையில், இது குறித்து முடிவு எடுக்குமாறு கடிதம் அனுப்பியது.
இந்த கடிதத்தை சட்ட அமைச்சகத்துக்கே திருப்பி அனுப்பிய தேர்தல் ஆணையம், இந்த விவகாரத்தில் சட்டம் இயற்றுவதே சிறந்த வழியாக இருக்கும் என கூறியுள்ளது. மேலும் விதி 324-ன் கீழ் கருத்துக்கணிப்புகளை தடைசெய்வது சட்டப்படி சத்தியமாகாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications