Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்லிம் பெண்களின் நீதிக்காகவே பொது சிவில் சட்டம்... அஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கவுஹாத்தி: முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார். பொது சிவில் சட்டத்துக்கு அனைத்து இந்திய முஸ்லிம்களின் தனிநபர் சட்ட வாரியம், அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஹிமந்தா பிஸ்வா சர்மா இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சட்டங்களை பின்பற்ற வழிவகை செய்வது தான் பொது சிவில் சட்டம். இதன்மூலம் மத வேறுபாடுகள் எதுமின்றி அனைத்து தரப்பினரின் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை உள்பட அனைத்து ஒரே மாதிரியாக சட்டம் அமலாகும்.

இந்த சட்டத்தை அமல்படுத்த பாஜக ஆளும் சில மாநிலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுபற்றி அந்தந்த அரசுகள் ஆலோசனைகள் செய்து வருகின்றன.

பாஜக மாநிலங்களின் நிலைப்பாடு

பாஜக மாநிலங்களின் நிலைப்பாடு

பாஜக ஆட்சி செய்யும் இமாச்சல் பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பொது சிவில் சட்டத்தை மாநிலத்தில் கொண்டு வர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் கூறுகையில், ‛‛பொது சிவில் சட்டத்தை உருவாக்க உயர்மட்டக் குழு விரைவில் அமைக்கப்படும்'' என்றார். உத்தர பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அம்மாநில அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறியுள்ளார்.

 முஸ்லிம்கள் வாரியம் எதிர்ப்பு

முஸ்லிம்கள் வாரியம் எதிர்ப்பு

இதற்கு அனைத்து இந்திய முஸ்லிம்கள் தனிநபர் சட்ட வாரியம் கடுமையாக எதிர்த்துள்ளார். இந்த வாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா காலித் சைபுல்லா ரஹ்மானி வெளியிட்ட அறிக்கையில், ‛‛உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் பேச்சு உள்ளது. இது அரசியலமைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது. இதை கைவிட வேண்டும்'' என கூறியுள்ளார்.

 ஓவைசி எதிர்ப்பு

ஓவைசி எதிர்ப்பு

மேலும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரான ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை. கோவா சிவில் சட்டத்தின்படி மனைவி 30 வயதுக்குள் ஆண் குழந்தையை பெற்றெடுக்கவில்லை என்றால் இந்து மதத்தை சேர்ந்த ஆண் 2வது திருமணம் செய்துகொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் தேவையில்லை என சட்ட கமிஷன் தனது கருத்தை தெரிவித்துள்ளது'' என்றார்.

முஸ்லிம் பெண்களுக்கு நீதி

முஸ்லிம் பெண்களுக்கு நீதி

இந்நிலையில் தான் அஸாமில் ஆட்சி செய்யும் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பொது சிவில் சட்டம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகயைில், ‛‛இந்த சட்டம் தொடர்பாக எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் பொது சிவில் சட்டத்தை விரும்புகிறார். இந்த சட்டத்தின் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்கும். இதை நீங்கள் முஸ்லிம் பெண்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம். முஸ்லிம் பெண்கள் தங்களது கணவர் 3 மனைவிகளை வீட்டுக்கு அழைத்து வருவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+