பாகிஸ்தானுக்கு மரண பதிலடியை கொடுக்கும் இந்தியா.. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
ஜம்மு காஷ்மீர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் ஜம்மு மற்றும் எல்லையோர மாவட்டங்களில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறல்களுக்கு உறுதியான பதிலடியை கொடுத்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வந்தது.

பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் எனும் நடவடிக்கை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகளைக் கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவத்தின் இந்த வெற்றி பாகிஸ்தானை ஆத்திரமடையச் செய்த நிலையில், பாகிஸ்தான் எல்லையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. காஷ்மீர், பஞ்சாப் உட்பட எல்லையோர மாவட்டங்களில் பாகிஸ்தான் டிரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதுவரை எந்தவொரு சேதாரமும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக எல்லையில் பல்வேறு இடங்களில் 24 மணி நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் தொடர்ந்து சைரன்கள் ஒலித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நடுவானிலேயே அந்த டிரோன்களை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்தது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு உறுதியான பதிலடி கொடுத்து வருவதாக என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: இத்தாலியின் துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான அன்டோனியா தஜானியுடன் பேசப்பட்டுள்ளது. அப்போது, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தியாவின் இலக்கு மற்றும் பதிலடி குறித்து விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு உறுதியான பதிலடி கொடுத்து வரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications