மார்க் வேணுமா மடியில படு... பாஸ் ஆக படுக்கைக்கு வா- பேராசிரியர்களின் அயோக்கியத்தனம்
அரசு கல்லூரியில் அதிக மார்க் போடுவதாக கூறி ஸ்பெஷல் கிளாஸ் வைத்து படுக்கைக்கு அழைத்துள்ளனர் பேராசிரியர்கள். அவர்களுக்கு உதவிய பியூன், லேப் அசிஸ்டெண்ட் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பரிதாபாத்: "கண்ணுங்களா நான் சொல்ற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா எங்கேயோ போயிருவீங்க" என்று சொல்லி போனில் பிரைன்வாஸ் செய்த அருப்புக்கோட்டை நிர்மலாதேவியைப்பற்றி அறிந்திருப்போம். அரசு கல்லூரியில் சுமாராக படிக்கும் மாணவிகளுக்கு அதிக மதிப்பெண் போட அவர்களை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்களின் அயோக்கித்தனம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது ஹரியானா மாநிலம் பரிதாபாத் அரசுகலைக்கல்லூரியின்தான் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
படிக்கும் இடத்திலும் வேலை செய்யும் இடத்திலும் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வேலியே பயிரை மேயும் கதையாக பல இடங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே சீரழிக்கின்றனர்.
பரிதாபாத் அரசு கலைக்கல்லுரியில் பியூன் விக்ரமும், லேப் அசிஸ்டெண்ட் ஜக்தேவும் இணைந்து மாணவிகளை பேராசிரியர்களுக்கு விருந்தாக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் மாணவியை படுக்கைக்கு அழைத்ததை ஆடியோவாக பதிவு செய்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த படுபாதக சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாலியல் பாடம்
அறிவை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே மாணவிகளின் இயலாமையை பயன்படுத்தி படுகுழியில் தள்ளுவது நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் அருப்புக்கோட்டை, கரூரில் சில பேராசிரியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இதேபோல ஹரியானா மாநிலம் பரிதாபாத் கல்லூரியில் நிகழ்ந்துள்ளது. மாணவிகளை படுக்கைக்கு அழைத்த அந்த கயவர்களை கைது செய்த போலீஸ் சிறையில் தள்ளியுள்ளனர்.

மார்க் குறைவா இருக்கே
அரசு கல்லூரியில் படிப்பில் பின்தங்கிய மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி வரவழைத்து அவர்களிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலை தொடங்கியுள்ளனர். எங்களிடம் அட்ஜஸ்ட் செய்து நடந்து கொண்டால் அதற்கு தகுந்த மதிப்பெண் போடுவோம் அப்புறம் மேற்படிப்புக்கு பிரச்சினை இருக்காது என்று கூறியே மூளைச்சலவை செய்துள்ளனர்.

அச்சத்தில் இழந்த மாணவிகள்
கல்லூரி பியூன் விக்ரம், லேப் அசிஸ்டெண்ட் ஜக்தேவ் இணைந்து மாணவிகளை பேராசிரியர்கள் சிலருக்கு மாணவிகளை விருந்தாக்கியுள்ளனர். இதை வெளியில் சொன்னால் படிப்பு பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் சிலர் இதை மறைத்து விட்டனர். திருட்டு பூனைக்கு யாராவது ஒருவர் மணி கட்டித்தானே ஆகவேண்டும். துணிந்த ஒரு மாணவி, ஜக்தேவின் பேச்சை பதிவு செய்து ஆதாரத்தோடு புகார் அளித்துவிட்டார்.

மூன்று பேர் கைது
மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விக்ரம், ஜக்தேவையும் பேராசிரியர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் தேவைக்கு மாணவிகளை பயன்படுத்திய அயோக்கியர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஹரியானாவில் பாஸ் மார்க் போட படுக்கைக்கு அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications