திமுக-அதிமுக மாதிரி எதிரேயுள்ள தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிகள், கூட்டணி வைக்கப்போகிறதா?
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அங்கு தொங்கு சட்டசபை அமையலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் தந்தை மகனான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மாற்றுக் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அதோடு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும்.

காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 46 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
மொத்தம் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. எக்சிட் போல் முடிவுகளில், பெரும்பாலும் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெற வாய்ப்புள்ளதாகவே கூறப்பட்டது.
இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, 5 பாஜக ஆதரவாளர்கள் கவர்னர் நியமனம் மூலம் எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக இதுவரை தனிப்பெரும்பான்மையுடன் ஜம்மு காஷ்மீரை ஆட்சி அமைத்தது இல்லை. இதனால் அங்கு எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
இருப்பினும் அந்தக் கூட்டணி - பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக எக்சிட் போலில் கூறப்பட்டிருந்தது. அப்படி நடந்தால் என்ன செய்வதென்று அரசியல் கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன.
அந்த வகையில் தேசிய மாநாட்டு கட்சி, மெஹபூபா முக்தியின் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சியின் அப்துல்லா குடும்பத்தில் மாற்றுக் கருத்து நிலவி வருகிறது.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறுகையில், மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராகவே உள்ளோம். ஜம்மு காஷ்மீரை பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் எங்கள் விருப்பு வெறுப்புகளை மறந்து நாட்டின் நலனுக்காக கைக்கோர்க்க தயாராக உள்ளோம் என்றார்.
ஆனால் ஃபரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு இப்போது அவசியமில்லை. இப்போதிருக்கும் நிலைமை வேறு. மக்கள் என்ன முடிவு செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதனால் இப்போதைக்கு இதில் எந்த கருத்தும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
மக்கள் ஜனநாயக கட்ச தலைவர் மெஹபூபா முக்தியின் மகள் இதிஜா முப்தியும், இதைப் பற்றி இப்போது பேச வேண்டியதில்லை. முதலில் தேர்தல் முடிவுகள் வரட்டும். நாட்டின் நலனை பொறுத்து எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முக்கிய முடிவு எடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications