சூரத்திலுள்ள 17 மாடி கட்டிடத்தில் தீவிபத்து: பல கோடி சேலை, வேட்டி எரிந்து நாசம்
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரின், டெக்ஸ்டைல் மார்க்கெட் பகுதியில் உள்ள 17 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாயின.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரின் டெக்ஸ்டைல் மார்க்கெட் என்ற ஏரியாவில், ஆர்சிட் டவர் என்ற பெயரிலான 17 மாடி கட்டிடம் உள்ளது. இதில் பிரபல ஆடை நிறுவனங்களின் அலுவலகங்கள், குடோன்கள் செயல்படுகின்றன. இன்று காலை கட்டிடத்தின் 4வது மாடியிலுள்ள 'விபுல் சாரீஸ்' நிறுவனம் அமைந்திருந்த பகுதியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்து மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது.

தகவலறிந்து 20 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். துணியில் தீ பிடித்ததால் அதை அணைப்பதற்கு வீரர்கள் வெகுநேரம் போராட வேண்டிவந்தது. அந்த இடம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இருப்பினும், அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் பாதிப்பு எதுவும் இல்லை. அதே நேரம் கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆடைகள் எரிந்து நாசமாயின. விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications