"ஐயோ வேண்டவே வேண்டாம்.." யூடர்ன் போட்ட விமானங்கள்.. மொத்தமாக முடங்கிய பாகிஸ்தான் வான்வெளி
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இப்போது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதனால் எல்லையில் நொடிக்கு நொடி பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இந்தியாவும் லாகூர் உட்பட முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலால் பாகிஸ்தான் வான்வெளியில் விமானங்களே இல்லாத சூழல் நிலவுகிறது.
பஹல்காம் தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதில் 9 முகாம்களில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் வெற்றியைப் பொறுக்காமல் பாகிஸ்தான் பதிலடி தந்து வருகிறது.

பாகிஸ்தான் வான்வெளி
காஷ்மீர் தொடங்கி எல்லையில் பல்வேறு மாவட்டங்களிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் ட்ரோன்களை இந்தியா தொடர்ந்து வீழ்த்தி வருகிறது. இதுவரை பாகிஸ்தான் தாக்குதலால் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. இதற்கிடையே சர்வதேச அளவில் விமானங்களை டிராக் செய்யும் flightradar24 தளத்தில் பார்த்தாலே ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
அந்தத் தளத்தில் நாம் பார்த்தால் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் விமானப் போக்குவரத்து வழக்கம் போலவே இருக்கிறது. நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகவே வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு மட்டுமே விமானச் சேவை இல்லாமல் இருக்கிறது. மற்றபடி டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை உட்பட நாடு முழுக்க விமானச் சேவை வழக்கம் போலவே இருக்கிறது.

மொத்தமாக முடங்கியது
ஆனால், பாகிஸ்தானில் அப்படி இல்லை. பாகிஸ்தான் ஏர்ஸ்பேஸில் இப்போது 4, 5 விமானங்கள் மட்டுமே இருக்கிறது. அதுவும் கூட அருகே இருக்கும் விமான நிலையத்தை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் வான்வெளியும் விமானமே இல்லாமல் இருக்கிறது.
யூடர்ன் போட்ட விமானங்கள்
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இந்தியா லாகூர் உட்பட பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி அவர்களின் முதுகெலும்பையே உடைத்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் திணறி வருகிறது. இந்தியாவில் சர்வதேச விமானச் சேவை பாதிக்கவில்லை. ஆனால், தற்போதைய சூழலில் பாகிஸ்தான் வான்வெளியில் பறந்தால் அது தங்களுக்குத் தான் ஆபத்து என பாகிஸ்தானை நோக்கி வந்த விமானங்கள் கூட யூடர்ன் போட்டுள்ளது flightradar24 தளத்தில் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்திய விமான நிறுவனங்கள்
இந்தியாவில் ஏற்கனவே வடமேற்குப் பகுதிகளில் உள்ள விமான நிலையங்களில் விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதைத் தாண்டி மற்ற பகுதிகளில் விமானச் சேவை நிறுத்துவது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. அதேநேரம் ஏர் இந்தியா, ஆகாசா ஏர் உள்ளிட்ட நிறுவனங்கள் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையம் வர அறிவுறுத்தியுள்ளது.
இப்போது பதற்றம் அதிகமாக இருக்கும் சூழலில் சோதனை நடைமுறைகள் கடுமையாக இருக்கும். இதனால் விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகப் பயணிகள் அனைவரும் சுமார் 3 மணி நேரத்திற்கு முன்கூட்டியே விமான நிலையம் வர இரு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. அதைத் தாண்டி எந்தவொரு சிக்கலும் இந்தியாவில் இல்லை. ஆனால், பாகிஸ்தான் ஏர்ஸ்பேஸே இந்திய தக்குதல் முடங்கிப் போய் இருக்கிறது.












Click it and Unblock the Notifications