For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி மரணம்

Google Oneindia Tamil News

Former Andhra Pradesh CM N. Janardhana Reddy passes away
ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 80.

நெடூருமல்லி ஜனார்த்தன ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட ரெட்டி, கல்லீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டார். அவரை ஹைதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். ஏப்ரல் 26ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் உயிரிழந்தார்.

அவரது உடல் சோமாஜிகுடாவில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான ரெட்டி, விசாகப்பட்டனம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆந்திர மாநில முதல்வராக 1990 முதல் 92 வரை பதவி வகித்துள்ளார்.

அவருக்கு ராஜ்யலட்சுமி என்ற மனைவியும் 4 மகன்களும் உள்ளனர்.

நக்சலைட்களின் ஹிட் லிஸ்ட்டில் இருந்தவர் ரெட்டி. 2007ம் ஆண்டு நெல்லூரில் வைத்து அவரைக் கொல்ல முயற்சிகளும் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Andhra Pradesh Chief Minister Nedurumalli Janardhana Reddy died in Hyderabad on Friday. He was 80. Reddy was suffering from liver ailment and was admitted to the NIMS hospital on April 26. His body has been shifted to his house in Somajiguda. Reddy was a member of Indian National Congress and represented Visakhapatnam constituency of Andhra Pradesh. He has also served as Andhra Pradesh Chief Minister from 1990 to 1992. Reddy is survived by his wife Nedurumalli Rajyalakshmi and four sons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X