For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயிற்சி வழக்கறிஞரின் பாலியல் புகாரில் சிக்கியது முன்னாள் நீதிபதி ஸ்வாதேந்தர் குமார்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பெண் பயிற்சி வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தது உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்வாதேந்தர் குமார் மீதுதான் என்று தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது,

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீது அவரிடம் பயிற்சி வழக்கறிஞராகப் பணியாற்றிய பெண், பாலியல் புகார் கொடுத்தார். அதையடுத்து எதிர்ப்பு எழுந்ததால், கங்குலி, தான் வகித்து வந்த மேற்கு வங்காள மனித உரிமை ஆணைய தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், மற்றொரு நீதிபதி மீதும் பாலியல் புகார் எழுந்தது. ஆனால் நீதிபதியின் பெயர் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஸ்வாதேந்தர் குமார்தான் பாலியல் புகாரில் சிக்கியவர் என ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது அவர் உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பில் இருந்து ஓராண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். தற்போது, ஒரு தீர்ப்பாயத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

ஆனால் முன்னாள் நீதிபதியான ஸ்வாதேந்தர் குமார் தன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

English summary
Yet another former Supreme Court judge has been named in a sexual harassment case. After justice AK Ganguly's case got highlighted in the media, another law intern alleged that she was sexually harassed by former Supreme Court judge Swatanter Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X