வாயில் மதுவை ஊற்றி மைனர் சிறுமி பலாத்காரம்: பி.இ. மாணவர்கள் உட்பட 5 பேர் கைது!
ஹைதராபாத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்: ஹைதராபாத் கட்கேசர் பகுதியில் உள்ள கல்லூரியில் டிப்ளோமா படிக்கும் மாணவியை அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றி பலாத்காரம் செய்தது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்கேசர் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் டிப்ளோமா படித்து வரும் மாணவி, அதே கல்லூரியில் பொறியியல் படிக்கும் தனது நண்பர்கள் ஹரிஷ், சமீர், ஹேமந்த் ஆகியோருடன் அங்குள்ள ஹுக்கா பார்லருக்கு சென்றுள்ளார். அங்கு அவரை ஹுக்கா புகையை இழுக்கும்படி கட்டாயப்படுத்திய மாணவர்கள், அந்த சிறுமிக்கு வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றியுள்ளனர்.

பின்னர் அங்குள்ள அறைக்கு அவரை தூக்கிச்சென்ற மாணவர்கள் வேறொரு கல்லூரியில் பொறியியல் படிக்கும் அஜய் என்ற மாணவனையும் வரவழைத்துள்ளனர். ஹரிஷ் என்ற மாணவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மற்ற மாணவர்கள் அதற்க்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுதொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகளை அழித்த ஹுக்கா பார்லர் உரிமையாளர் அப்பாஸும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்த வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹுக்கா பார்லர் உரிமையாளர் அப்பாஸ் உட்பட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைக்கு அடிமையாக்கி சிறுமியை உடன் படிக்கும் மாணவரே பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications