முத்தம் கொடுத்தா நாக்கை கடிங்க!.. போபால் பெண்ணின் அட்வைஸ்!!
போபால்: கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த வாலிபரின் நாக்கை கடித்து காயப்படுத்தியுள்ளார் இளம்பெண் ஒருவர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபாலில் உள்ள பியூட்டி பார்லரில் 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். திங்கட்கிழமையன்று காலை வேலைக்கு சென்ற அந்த பெண்ணை 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வழிமறித்து கட்டாயப்படுத்தி முத்தமிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வாலிபரின் நாக்கை நன்றாக கடித்து காயப்படுத்தினார். இதனால் வலியால் அந்த வாலிபர் அலறி துடித்தார். இது குறித்து இரண்டு பேரும் கம்லாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்போது, தான் பியூட்டி பார்லரில் வேலை செய்வதாகவும், இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் கூறிய அந்த பெண், கடந்த சில நாட்களாகவே அந்த வாலிபர் தன்னை கேலி செய்ததாகவும், இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
ஆனால், முத்தம் கொடுத்த வாலிபரோ, தானும், அந்த பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக பழகி வந்ததாகவும், ரதிபேட்டில் வேலை பார்த்து வந்த தன்னை போபால் வந்து இரவில் ரயில் நிலையத்தில் தங்கியிருந்தபோது, காலையில் தம்மை சந்திக்குமாறு கூறியதாகவும், அதன்படி தாம் ரயில் நிலையத்தில் படுத்து தூங்கிவிட்டு காலையில் அந்த பெண்ணை பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால் காவல்துறையினர், அந்த வாலிபரின் விளக்கத்தை ஏற்க மறுத்ததோடு வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே வாலிபரின் நாக்கை கடித்த அந்த இளம்பெண், இதே போன்று பெண்களுக்கு ஒரு நிலைமை ஏற்பட்டால் தாம் கடைபிடித்த முறையை பின்பற்ற வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications