டெல்லி ஹோட்டலில் 15 வயது மைனர் சிறுமி பலாத்காரம்: நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் கைது
டெல்லியில் 15வயது இளம் பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் ஆண் நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: பகர்கன்ஜ் பகுதியைச் சேர்ந்த ரேகன் என்பவர் தனது காதலியை சினிமாவுக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்துள்ளார் இதனை நம்பி சென்ற அவரை அப்பகுதியில் உள்ள ஹோட்டல் அறைக்கு கூட்டிச்சென்றுள்ளார்.
பின்னர் ஹோட்டல் அறையில் இருந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கிய ரேகன் அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளார். இதையடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ரேகன் அந்த மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேகன் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
டெல்லி ஸ்லம் பகுதியை சேர்ந்த ரேகன் மீது ஏற்கனவே கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications