15 வயது தான்.. ஆசிரமத்திலேயே சிறுமி தொடர் பலாத்காரம்.. சிக்கிய 64 வயது சாமியார்! அலறும் ஆந்திரா
அமராவதி: ஆந்திராவில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சாமியாரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் கடந்த 2012ல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 2வது முறையாக வசமாக சிக்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வென்கோஜியில் ஞானானந்த ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தின் நிர்வாக அதிகாரியாக சாமியார் பூர்ணானந்த சரஸ்வதி செயல்பட்டு வருகிறது.
இந்த ஆசிரமத்தில் தாய், தந்தை இல்லாதவர்கள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு 15 வயது சிறுமி ஒருவரும் வசித்து வந்தார்.

இந்நிலையில் தான் சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதி, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த சில மாதங்களாக மடாதிபதி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வெளியில் சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த சிறுமி சம்பவம் குறித்து வெளியில் கூற முடியாமல் மனம் நொந்து போனார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மடாதிபதி பூர்ணானந்தா சரஸ்வதி, சிறுமியை தொடர்ந்து வலுக்கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சிறுமி யாருக்கும் தெரியாமல் ஆசிரமத்தை விட்டு வெளியேறி ரயில் மூலம் விஜயவாடா சென்றார். அங்கு அவரை போலீசார் மீட்டு விசாரித்தனர்.
விசாரணையில் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுதபடி கூறியுள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து திஷா போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்திவு செய்தனர். மேலும் சாமியார் பூர்ணானந்தா சரஸ்நதியை உடனடியாக நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தான் சாமியார் சிறுமிக்கு இழைத்த கொடூரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி உதவி போலீஸ் கமிஷனர் விவேகானந்தா கூறுகையிால, ‛‛கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறுமிக்கு, சாமியார் பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடுமை தாங்க முடியாமல் பணியாளர் ஒருவரின் உதவியுடன் சிறுமி ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி விஜயவாடா சென்றார். அங்கு அவர் மீட்கப்பட்டார். குழந்தை நலக்கமிட்டி சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
தற்போது கைதான சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதி பாலியல் வழக்கில் சிக்குவது முதல் முறையல்ல. கடந் 2012ல் 13 வயது சிறுமிக்கு ஆசிரமத்தில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications