பக்தையிடம் ரூ.18 லட்சம் அபேஸ் செய்துவிட்டு பக்தரின் மனைவியுடன் சாமியார் எஸ்கேப்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவரிடம் ரூ. 18 லட்சத்தை ஏமாற்றிவிட்டு, பக்தர் ஒருவரின் மனைவியோடு ஓட்டம் பிடித்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சகர்கேதா கிரமாத்தைச் சேர்ந்தவர் திலீப் குமார் ஜமுனாபிரசாத் திவாரி என்ற ஹரிஓம் பாபா(42). அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கல்பனா பாகர்(40) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். கல்பனா தோல் வியாதியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து நான் உன் தோல் வியாதியை குணப்படு
த்துகிறேன் என்று கூறிய சாமியார் ஹரிஓம் சின்னார் தாலுகாவில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அவ்வாறு சென்று வந்தபோது கல்பனாவின் குடும்பம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து தகவல் சேகரித்துள்ளார். சின்னூர் தாலுகாவில் தனக்கு ஆசிரமம் கட்ட பணம் அளிக்க கல்பனாவை சம்மதிக்க வைத்துள்ளார். இதையடுத்து கல்பனா தனது நிலத்தை விற்று ரூ.18 லட்சத்தை ஹரிஓமிடம் கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை பெற்ற சாமியார் தனது தந்தையின் பெயரில் ஜேசிபி எந்திரம் வாங்கியுள்ளார். இதையடுத்து கல்பனா சாமியார் மீது போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் சாமியார் தனது மனைவியுடன் ஓட்டம் பிடித்துவிட்டதாக அவர் மீது மங்கேஷ் தான்புரி என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மங்கேஷுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்துள்ளது.
மங்கேஷ் தனது புகாரில் கூறியிருப்பதாவது,
பாபா எனக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு நான் என் மனைவியுடன் அகமதுநகர் மாவட்டம் கோபர்காவ்னில் உள்ள பாபாவின் ஆசிரமத்தில் இருந்து வந்தேன். இந்நிலையில் அவர் எனது மனைவியுடன் ஓட்டம் பிடித்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
ஹரிஓம் நாசிக்கில் உள்ள தனது பக்தர்களிடம் பணத்தை இரட்டிப்பு செய்கிறேன், உங்கள் வியாதிகளை குணப்படுத்துகிறேன் என்று கூறி ஏமாற்றியுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் தற்போது சாமியாரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications