பர்தா அணிந்து பெண்கள் கழிவறைக்கு சென்ற நபர்.. அடி பின்னியெடுத்த கோவா மக்கள்

Subscribe to Oneindia Tamil

பனாஜி: பெண்கள் கழிவறைக்குள் பர்தா அணிந்து சென்ற 35 வயது நபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி, போலீசில் ஒப்படைத்தனர்.

வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது இஸ்லாம் பெண்கள் பர்தா அணிந்து செல்வது வழக்கம். அவர்களின் இந்த வழக்கத்தை தனது ஆசைக்காக பயன்படுத்தி கொள்ள நினைத்திருக்கிறார் ஒருநபர். விளைவு... தற்போது போலீசில் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

Government employee booked for wearing burka, entering ladies toilet in goa

விர்ஜில் பெர்ணான்டஸ் என்கிற நபர், கோவா மாநிலம் பனாஜி பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொது கழிப்பிடத்திற்குள் பர்தா அணிந்து சென்றுள்ளார்.

யார் கண்களிலும் சிக்காமல் உள்ளே சென்ற அவர், வெளியே வரும்போது அங்கிருந்த பயணிகளிடம் வசமாக மாட்டிக்கொண்டார். இதனையடுத்து, அந்த நபரை சுற்றி வளைத்த அங்கிருந்த மக்கள்... பின்னி எடுத்துள்ளனர்.

இதனையடுத்து, பானாஜி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பெர்ணான்டஸ் மீது 419-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+