இனி அட்டஸ்டேசன் கேட்டு அதிகாரிகளிடம் அலைய வேண்டாம்!
டெல்லி: அரசு வேலை வாய்ப்பு அல்லது தட்கல் பாஸ்போர்ட் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது தற்போதுள்ள நற்சான்று இணைப்பு நடைமுறையை கைவிடுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் சேரும்போதோ, அரசு வேலையில் இணையும்போதோ, தட்கல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போதோ இன்னும் பல முக்கியமான காரணங்களின்போதோ கெசட்டட் அதிகாரியிடமிருந்து நற்சான்றிதழ் பெற்றுவரும்படி குடிமக்கள் பணிக்கப்படுகிறார்கள்.

இதனால் பண விரையம் மட்டுமின்றி, கால விரையமும் ஏற்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் அனைத்து துறை செயலர்கள் மட்டத்திலான ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற சான்றிதழ் பெறும் நடைமுறையை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
விண்ணப்பிக்கும் நபர் தன்னைப்பற்றி அளிக்கும் சுய சான்று மட்டுமே போதுமானதாக இருக்க வேண்டும், அப்போதுதான் கால நேரத்தை மிச்சம்பிடிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இதுபோன்ற நடைமுறை பாஜக ஆளும் குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ளது. இருப்பினும் அனைத்து மட்டத்துக்கும் விரிவுபடுத்தப்படவில்லை. இப்போது மத்திய அரசு மட்டத்திலும், மாநிலம் தழுவிய அளவிலும் இதை நடைமுறைப்படுத்த மோடி திட்டமிட்டுள்ளார்.
இதேபோல அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதிலும், மோடிக்கு அதிக ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. செயலர்கள் கூட்டத்தில் பேசிய மோடி, யாராவது தவறு செய்தால் அவர்களின் தவறை திருத்த வேண்டுமே தவிர, பணியிடமாற்றம் செய்யக்கூடாது. ஏனெனில் பணியிடமாற்றம் செய்தால் இங்குள்ள ஒரு தவறை எடுத்து மற்றொரு இடத்தில் வைக்கிறோம் என்பதுதான் அதன் அர்த்தம் என்று கூறியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications