திருமணத்தில் மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்காக துப்பாக்கி சூடு... மாப்பிள்ளை உயிரை பறித்த சோகம்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தவறுதலாக மணமகன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சிதாபூர் என்ற பகுதியில் நேற்று இரவு மித் ரஸ்தோகி என்ற 28 வயது நபருக்கு திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் மணமகனை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது மகிழ்ச்சி கொண்டத்திற்காக வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளது.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிலர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக குதிரை மேல் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளையின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த அவர் குதிரையில் இருந்து கீழே விழுந்தார். அவரை மீட்ட உறவினர்கள் சிதாபூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரஸ்தோகி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்செயலாக நடந்த துப்பாக்கி சூட்டில் பலியாகி விட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண ஊர்வலத்தில் மணக்கோலத்தில் இருந்த மணமகன் உயிரிழந்த சம்பவம் திருமண வீட்டாரையும் அப் பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் முடிவு வெளியான பின் ஷாம்லி நகரில் கொண்டாட்டத்திற்காக நடந்த துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications