"தாலி கட்டும் நேரத்தில் கூட இப்படி போதையில் வருவியா.. உன்கூட மனுஷன் வாழ்வானா" மணமகளுக்கு பளார்!
Recommended Video
கான்பூர்: "தாலி கட்டும் நேரத்தில் கூட இப்படி தண்ணி அடிச்சிட்டுத்தான் வருவியா.. உன்கூட மனுஷன் வாழ்வானா" என்று மாப்பிள்ளையை நேருக்கு நேராக கேள்வி கேட்டு, கழுத்தில் இருந்த மாலையையும் கழட்டி வீசினார் கல்யாண பெண் ஒருவர்!
திருமணம் என்றாலே வைபோகம்தான்.. அது நம்ம ஊர் என்றாலும் சரி, வடமாநிலமாக இருந்தாலும் சரி.. ஆட்டம், பாட்டம் என களைகட்டுவது இயல்புதான்! ஆனால் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடந்த ஒரு கல்யாணம்தான் கொஞ்சம் ஓவராகிவிட்டது.
பரேலியில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு ஜோடிக்கு கல்யாணம் ஆனது. மாப்பிள்ளை டிகிரி முடிக்கவில்லை, பாதியிலேயே காலேஜ் விட்டு நின்றுவிட்டுள்ளார். ஆனால், கல்யாண பெண், டிப்ளமோ படித்திருக்கிறார்கள். இவர்களுக்கு போன வெள்ளிக்கிழமை கல்யாணம் நடந்தது.

மாப்பிள்ளை
ஊர் முழுக்க பத்திரிகை வைத்து, ஏராளமான சொந்த, பந்தங்கள், நண்பர்கள் திரண்டிருந்தனர். இவர்கள் அனைவரின் ஆசி, வாழ்த்தோடு, மாப்பிள்ளை, மணமகளுக்கு தாலி கட்டினார். பிறகு புதுத்தாலி, மாலையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். அந்த நேரம் பார்த்து, மணமகனை அவரது நண்பர்கள், "பாம்பு டான்ஸ் ஆடலாம் வாடா மாப்பிள்ளை.." என்று அழைத்தனர்.

அதிர்ச்சி
நண்பர்கள் ஆசையுடன் கேட்கவும், மாப்பிள்ளை குஷியில் ஆட ஆரம்பித்தார். அங்கெல்லாம் ஒரு நிகழ்ச்சி என்றால் நாகினி டான்ஸ்தான் ரொம்பவும் ஃபேமஸ்! அப்போது திடீரென மாப்பிள்ளைக்கு போதை தலைக்கேறிவிட்டது. அதனால், டான்ஸ் ஆடியவர் திடீரென குப்புற கவிழ்ந்து கீழே விழுந்தார். பிறகுதட்டுத்தடுமாறி எழுந்து திரும்பவும் ஆட ஆரம்பித்தார். இதை கவனித்த கல்யாண பெண்ணுக்கு ஷாக்.. அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார்.

மணப்பெண்
"தாலி கட்டும் நேரத்தில் கூட இப்படி தண்ணி அடிச்சிட்டுத்தான் வருவியா.. உன்கூட மனுஷன் வாழ்வானா" என்று மாப்பிள்ளையை நேருக்கு நேராக கேட்டுவிட்டார். அத்துடன், கழுத்தில் இருந்த மாலையையும் கழட்டி வீசினார். எல்லார் முன்னிலையிலும் மணப்பெண் இப்படி செய்தது மாப்பிள்ளைக்கு அவமானமாகிவிட்டது. உடனே, பளார் என்று கல்யாண பெண்ணை அறைந்துவிட்டார் மாப்பிள்ளை. இதை பார்த்ததும், மணமகள் வீட்டினர், மணமகன் வீட்டினரை தாக்க முற்பட்டு அந்த இடமே கொஞ்ச நேரத்தில் களேபரமாகிவிட்டது.

புகார்
உடனே தகவலறிந்து போலீசும் மண்டபத்துக்கு வந்துவிட்டது. ஆனால் நாங்களே பேசி தீர்த்து கொள்கிறோம் என்று இரு வீட்டாரும் சொல்லிவிட்டனர். ஒருத்தரையொருத்தர் புகாரும் தரவில்லை.. பெண்ணுக்கு தரப்பட்ட எல்லா சீரையும் மாப்பிள்ளை வீட்டார் திருப்பி தந்துவிட்டனர். அவர்களும் அதை எடுத்து கொண்டு, அங்கிருந்து கிளம்பி சென்றனர். கலகலவென தடபுடலாக நடந்து கொண்டிருந்த கல்யாண நிகழ்ச்சி பெரும் பரபரப்பு, சோகத்துடன் முடிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications