"தங்க மகன்".. உடம்பில் கிலோ கணக்கில் நகையை மாட்டிகொண்டு.. ஜெர்க் தருவாரே.. அவரது ஷாக் முடிவு பாருங்க
நடமாடும் நகைக்கடை மனிதர் குஞ்சாப் பட்டேல் தற்கொலை செய்து கொண்டார்
காந்திநகர்: நடமாடும் நகைக்கடை மனிதர் குஞ்சாப் பட்டேல், ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்று குஜராத் மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
குஞ்சாப் பட்டேல்... இவர் நம்ம ஊர் ஹரிநாடார் போலவே.. அவரை போலவே கழுத்திலும், கைகளிலும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு உலா வருவார்..
ஹரிநாடார் எங்கு பிரச்சாரம் செய்தாலும், அவரை பார்க்க பெண்கள் கூட்டம் எப்படி அலைமோதுமோ அப்படித்தான் இவரும் அகமதாபாத் சாலைகளில் ஃபேமஸ் ஆனவர்..

அரசியல்
ஹரிநாடார் போலவே இவரும் அரசியலில் நின்று தேர்தலில் போட்டியிட்டவர்.. 2017ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் எம்எல்ஏ தேர்தலில் சிவ சேனா சார்பில் குஞ்சாப் பட்டேல் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தவர் அகமதாபாத்தின் நடமாடும் நகைக்கடை என்றே இவரை சொல்வார்கள்..

வட்டி கடன்
வண்டிகள் வாங்குபவர்களுக்கு கடன் தரும் பிசினஸ் செய்து வந்தார்.. அந்த கடனை யாராவது சரியாக கட்ட தவறினால், வாகனங்களை அதிரடியாக பறிமுதலும் செய்துவிடுவார்.. இவ்வளவு புகழ்மிக்க இந்த நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

தற்கொலை
இவரது வீடு அகமதாபாத்தின் மாதோபுரா பகுதியில் உள்ளது.. வீட்டிற்குள்ளேயே தற்கொலை செய்திருக்கிறார்.. இந்த விஷயம் அறிந்து போலீசார் அதிரடியாக சென்று சடலத்தை கைப்பற்றினர்.. அப்போது வீட்டிற்குள் ஏதாவது லெட்டர் எழுதி வைத்திருக்கிறாரா என்று தேடிபார்த்தனர்.. ஒன்றும் சிக்கவில்லை.. இதையடுத்து, சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்..

வாக்குவாதம்
இது தற்கொலை என்று முதல்கட்டமாக தெரியவந்தாலும், அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் தெரியவில்லை.. ஆனால், தற்கொலைக்கு முன்பு மனைவியிடம் சண்டை போட்டாராம் குஞ்சால் பட்டேல்.. அதில்தான் தம்பதிக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது.. அதனாலேயே தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதிர்ச்சி
இருந்தாலும், கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு ரோட்டில் நடமாடும் மனிதர்களை திகைக்க வைத்து, கடன் செலுத்தாத நபர்களை மிரட்டி பணம் வசூல் செய்து கொண்டிருந்தவர், இப்படி திடீரென தற்கொலை செய்துகொண்டாரே என்று குஜராத் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications