உண்மையில், குஜராத்தில் தப்பிப் பிழைத்திருக்கிறது பாஜக!
Recommended Video

அகமதாபாத்: குஜராத்தில் பாஜக முன்னணியில் இருந்தாலும் கூட இப்படி ஒரு தடுமாற்றமான வெற்றியை அது எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த வகையில் தப்பிப் பிழைத்துள்ளது என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஜஸ்ட் மிஸ் என்ற வகையில் ஆட்சியைப் பறிக்கும் வாய்ப்பை நழவ விட்டுள்ளது. முன்னதாக, இருந்த டிரெண்ட்டை பார்த்தால், பாஜகவுக்கு வாக்களித்தோம் என கூறிவிட்டு காங்கிரசுக்கு ஓட்டுகளை குத்தி தள்ளி விட்டார்களா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் தற்போது பாஜக தப்பிப் பிழைத்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி மீண்டும் பாஜகவே அங்கு ஆட்சியமைக்கிறது.

வாக்கு எண்ணிக்கை
குஜராத்தில் நடைபெற்ற 2 கட்ட தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலை 9.15 மணி நிலவரப்படி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் சரிசம பலத்துடன் உள்ளதாக டிரெண்டுகள் கூறின.

மாறி மாறி முன்னிலை
ஆனால், எக்ஸிட் போல் முடிவுகளோ பாஜக அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெறும் என்று கூறியிருந்தன. பெரும்பான்மைக்கு 92 சீட்டுகள் தேவைப்படும் நிலையில், எல்லா சேனல்களின் எக்ஸிட் போல்களும் பாஜக சுமார் 110 சீட்டுகளுக்கும் மேல் பெறும் என்றே கூறியிருந்தன. ஆனால் டிரெண்ட் மாறி மாறி வந்தது.

பாஜகவா, காங்கிரஸா
ஆரம்பத்தில் பாஜகவுக்கு சாதகமாக இருந்தது. பின்னர் காங்கிரஸுக்கு சாதகமானது. இப்போது மறுபடியும் பாஜக லீடிங்கில் உள்ளது. அதாவது எக்ஸிட் போலில் இருந்து மாறுபட்டு உள்ளது. ஒரு முறை தமிழகத்தில் இப்படித்தான் ஆளும் கட்சிக்கு அஞ்சி, எக்ஸிட் போல் நேரத்தில் மக்கள், ஆளும் கட்சிக்கு வாக்களித்ததாக கூறியிருந்தனர். ஆனால் ரிசல்ட் எதிர்க்கட்சிக்கு சாதகமாக வந்தது.

ஒரு பாதி குஜராத் காங்கிரஸுக்கு
இப்போது குஜராத்திலும், பாஜகவுக்கு வாக்களித்தோம் என கூறிவிட்டு, மக்கள் காங்கிரசுக்கு ஓட்டுகளை குத்தி தள்ளிவிட்டார்களோ என்ற ஐயம் அரசியல் பார்வையாளர்களுக்கு எழுந்தது. இருப்பினும் தற்போது பாஜக லீடிங்கில் உள்ளது. அதேசமயம், கடந்த 22 வருடமாக இல்லாத அளவுகுக்கு வலுவான நிலையை காங்கிரஸ் தொட்டுள்ளது.












Click it and Unblock the Notifications