மனச்சாட்சியே இல்லையா.. பானிபூரி தண்ணீரில் சிறுநீரை கலந்த வியாபாரி.. வைரலாகும் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பானிபூரிக்கு பயன்படுத்தும் ரசத்தில் சிறுநீரை வியாபாரி ஒருவர் கலந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வடஇந்தியர்களின் உணவான பானிபூரி, பேல் பூரி, மசாலா பூரி உள்ளிட்ட உணவு பொருட்கள் பிரபலம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் இந்த உணவு பொருட்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் நுழைந்து அதற்கென ரசிகர்களை பெற்றுள்ளது.

அந்த வகையில் மக்கள் விரும்பி சாப்பிடுவது பானிபூரியாகும். சிறிய பூரிகளுக்கு இடையே ஓட்டை போட்டு அதில் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து அதை பானிப்பூரி தண்ணீரில் கலந்து தருவார்கள்.

பானிப்பூரி தண்ணீர்

பானிப்பூரி தண்ணீர்

அப்படியே ஓரே வாயாக வாயை மூடிக் கொண்டு உண்ண வேண்டியதுதான். அந்த பானிப்பூரி தண்ணீரில் புதினா, பச்சை மிளகாய் உள்ளிட்ட பொருட்களை அரைத்து தண்ணீராக்கி அதில் உப்பு சேர்த்து தயார் செய்வர். இந்த பானிபூரி தற்போது சூப்பர் மார்க்கெட்களில் ரெடிமேடாக கிடைக்கிறது.

கடைகளில் ஒரு பாக்கெட்

கடைகளில் ஒரு பாக்கெட்

சிறிய பூரிகள் பொறித்த நிலையில் கடைகளில் ஒரு பாக்கெட்டாக கிடைக்கின்றன. அது போல் பானிபூரி மசாலாவும் கிடைக்கிறது. இதை நாம் அந்த பேக்கில் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன் படி தயார் செய்ய வேண்டும். உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை பிசைந்து மசாலா செய்ய வேண்டும்.

விரும்பி உண்ணும் பானிப்பூரி

விரும்பி உண்ணும் பானிப்பூரி

பல மக்கள் விரும்பி கடைகளில் உண்ணும் பானிப்பூரியில் அன்பும், பாசமும் கலந்து வியாபாரிகள் கொடுப்பது வழக்கம். ஆனால் அஸ்ஸாமில் குவாஹாட்டியில் ஒரு வியாபாரி பானிப்பூரி நீரில் சிறுநீரை கலந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

20 வினாடிகள்

20 வினாடிகள்

இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. சுமார் 20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் பானிப்பூரி கடைக்காரர் தான் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஏப்ரானுக்கு அடியில் மஞ்சள் நிற மக்கை வைத்து எதையோ பிடிக்கிறார். அப்போது அவ்வழியாக ஒருவரை பார்த்த அவர் உடனே பானிபூரி தண்ணீர் இருப்பதாக சொல்லப்படும் ஒரு வெள்ளை நிற பக்கெட்டில் ஊற்றுகிறார்.

20 ஆம் தேதி 20 வினாடிகள்

20 ஆம் தேதி 20 வினாடிகள்

பின்னர் தனது பேண்டை சரி செய்து கொள்ளும்படியாக வீடியோவில் காணப்படுகிறது. எனவே சிறுநீரைத்தான் பிடித்து பானிப்பூரியில் ஊற்றுகிறார் என நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வீடியோ கடந்த 20 ஆம் தேதி மமூன் கான் என்பவரால் எடுத்து வெளியிடப்பட்டது. இதை பார்க்கும் மக்கள் அந்த கடைக்காரரை சமூகவலைதளங்களில் கண்டித்து வருகிறார்கள். இவரை போன்ற சிலரால் நேர்மையாக சுத்தமாக வியாபாரம் செய்யும் பலருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்.

முதல்முறையல்ல

முதல்முறையல்ல

இது போன்ற கலப்படங்கள் இது முதல்முறையல்ல. மும்பையில் உணவு தயாரிக்கும் கடைக்காரர் ஒருவர் ரயில்நிலையத்தில் உள்ள கழிப்பறையிலிருந்து தண்ணீர் பிடித்து வந்து உணவு தயாரிக்க பயன்படுத்திய சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரங்கேறியது. அது போல் 2018ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரல்- ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸில் உள்ள பயணிகளுக்கு டீ, காபி விற்பனை செய்ய ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தியதை அடுத்து அந்த ஒப்பந்ததாரருக்கு ரயில்வே நிர்வாகம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. உத்தரபிரதேசத்தில் மீரட் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பரிமாற சப்பாத்தி தயாரித்த சமையல்காரர் ஒவ்வொரு சப்பாத்தியிலும் உமிழ்நீரை துப்பி அதை தந்தூரி அடுப்பில் போட்ட சம்பவமும் வைரலானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+