ஆண்டுக்கு ஒரு நீட் தேர்வு.. சிபிஎஸ்இக்கு பதில் என்.டி.ஏ தேர்வை நடத்தும்: மத்திய அரசு புது அறிவிப்பு
டெல்லி: ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 7ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், வெளியிட்ட அறிக்கையில், ஆண்டுக்கு இரு முறை ஆன்-லைன் மூலமாக நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருந்தது.
இதையடுத்து கடுமையான எதிர்ப்புகள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எழுந்தன. மேலும் நீர் தேர்வு, எழுத்து தேர்வு மூலமாகவே, நடைபெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.

இதையடுத்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அதுவும், எழுத்துத் தேர்வு மூலமாக நடைபெறும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பழைய அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
2018 நவம்பர் 1ம் தேதியிலிருந்து 30ம் தேதிவரை நீட் தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அட்மிட் கார்டுகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மே 5ம் தேதி தேர்வு நடைபெறும், ஜூன் 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.
சிபிஎஸ்இ இதுவரை நீட் தேர்வை நடத்திய நிலையில், இனிமேல் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) தேர்வை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கடந்த வருடம் நடத்திய நீட் தேர்வு பெரும் குழறுபடிகளை உள்ளடக்கியிருந்தது.
தமிழில் மொழியாக்கம் செய்ததிலும் பெரும் தவறுகள் நடந்தன. சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை, சிபிஎஸ்இ செயல்பாட்டுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications