ஊழியரை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு அடித்துக் கொன்ற முதலாளி: தீயாக பரவும் வீடியோ
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் பணியாளர் ஒருவரை முதலாளி மற்றும் அவரது ஆட்கள் சேர்ந்து அவரது கை, கால்களை கட்டி தொங்கவிட்டு அடித்துக் கொலை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சிங். அவர் தனது மனைவி ரஜ்ஜி மற்றும் குடும்பத்தாருடன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவர் ஜஸ்ப்ரீத் சிங் என்பவருக்கு சொந்தமான பேக்டரியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் பேக்டரியில் ஏதோ திருடிவிட்டதாக கூறி ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் அவரது ஆட்கள் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ராம் சிங்கின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் அவரின் கை, கால்களை கட்டி அடித்துள்ளனர். அவர்கள் ராம் சிங்கை அடித்து, பஞ்சாபியில் திட்டி, சிரித்து ரசித்துள்ளனர்.
அவர்கள் ராம் சிங்கை அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். ராம் சிங்கின் உடல் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் ஜஸ்ப்ரீத் சிங் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications