கண்ணில் மிளகாய் பொடி தூவினார், செல்போனில் திட்டுகிறார்.. மனைவி மீது கணவன் போலீசில் புகார்
ஹுப்பள்ளி: கண்ணில் மிளகாய் பொடி தூவிவிட்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி எஸ்.எம்.எஸ் மூலமாகவும் திட்டுகிறார் என்று கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் கர்நாடக மாநிலம் தார்வாரில் நடந்துள்ளது.
ஹூப்பள்ளி-தார்வார் இரட்டை நகரை சேர்ந்தவர் சென்னபசவன கவுடா (44). அதே ஊரை சேர்ந்த மஞ்சுளா (35) என்பவருடன் 18 வருடங்களுக்கு முன்பு கவுடாவுக்கு திருமணமானது.

இந்நிலையில் சமீபகாலமாக கணவன், மனைவியிடையே தகராறு அதிகரித்து வந்துள்ளது. கடந்த 17ம்தேதி இதேபோல ஏற்பட்ட தகராறின்போது, கணவன், மனைவியிடையே கை கலப்பு ஏற்பட்டுல்ளது. அப்போது கணவன் கண்களில் மிளகாய் பொடியை எடுத்து வீசிவிட்டு தனது தாய் வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார் மஞ்சுளா.
கண் எரிச்சலால் கடும் அவதிப்பட்ட கவுடா ஓரளவுக்கு தேறியுள்ளார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு மனைவி மஞ்சுளாவிடமிருந்து அவ்வப்போது எஸ்.எம்.எஸ்கள் வரத்தொடங்கியுள்ளன. அதில் கவுடாவின் ஆண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தகாத வார்த்தைகளால் மஞ்சுளா திட்டியுள்ளார்.
இந்த எஸ்.எம்.எஸ் தொல்லையை தாங்க முடியாமல் தவித்த சென்னபசவன கவுடா, வித்யாகிரி பகுதி காவல் நிலையத்தில் தனது மனைவிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். மனைவி கொடுமை தாங்க முடியவில்லை என்று கணவன் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications