நண்பருடன் படுக்கையை பகிர சொல்லி கொடுமைப்படுத்திய கணவன்.. திருமணமான ஏழே மாதங்களில் ஆசிரியை தற்கொலை
அசோக் அவரது நண்பருடன் மனைவியை உடலுறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதாகவும், மனைவி மறுத்ததால், அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து அசோக் துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
Recommended Video

பெங்களூர்: தனது நண்பனுக்கு மனைவியை விருந்தாக கூறி வற்புறுத்தி மனைவியின் தற்கொலைக்கு காரணமான கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் அசோக். இவருக்கும் சுப்ரியா என்ற 24 வயது பெண்ணுக்கும் நடுவே 7 மாதங்கள் முன்பு திருமணமாகியது. சுப்ரியா அருகேயுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த சுப்ரியா, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

மனைவியை பகிர துணிந்த காமுகன்
இதையறிந்த சுப்ரியாவின் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்ரியா உயிரிழந்தார். இதையடுத்து மருமகன் அசோக் மீது சுப்ரியா தாய் அந்தோனம்மா புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகளை அசோக் அவரது நண்பருடன் உடலுறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதாகவும், சுப்ரியா மறுத்ததால், அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து அசோக் துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

காதல் திருமணம்
இதுகுறித்து அந்தோனம்மா கூறுகையில், கேரளாவுக்கு தியான வகுப்பு ஒன்றுக்கு சென்றபோது சுப்ரியாவுடன், அசோக்கிற்கு பழக்கம் ஏற்பட்டது. அசோக்கை காதலிப்பதாக கூறி, எங்களையெல்லாம் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். ஆனால், அவரது முடிவு இவ்வளவு மோசமானதாக போய்விட்டது. அசோக் தன்னை கொடுமைப்படுத்தியதை சுப்ரியா எங்களிடம் கூறவில்லை.

புகாரில் முழு விவரம்
கமிஷனர் அலுவலகத்திலுள்ள, மகளிர் உதவி மையத்தில், எனது மகள், கணவன் பற்றி புகார் கொடுத்தார். அங்குள்ள நிபுணர்கள், இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுத்தனர். அங்கு, தான் சரியாக இருப்பதாக உறுதியளித்து திரும்பிய அசோக், மீண்டும், எனது மகளிடம் தகராறு செய்தார். புகார் கொடுத்ததை வைத்தே பிரச்சினையை கிளப்பியுள்ளார். எனது மகள் கொடுத்த புகார் காப்பியை நான் படித்து பார்க்க நேர்ந்தது. அதன்பிறகுதான் எனக்கு விவரம் தெரிந்தது. இவ்வாறு அன்தோனம்மா கூறினார்.

கணவன் கைது
அன்தோனம்மா புகாரை ஏற்றுக்கொண்டுள்ள கெங்கேரி போலீசார் வரதட்சணை கொடுமை மற்றும் பெண்ணை கொடுமைப்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்ரியாவின் கணவர் அசோக்கை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications