சொந்தமா ஒரு வீடு கூட இல்லை என உருக்கமாகப் பேசிய மோடி! ஆனா குஜராத்தில் 1.10 கோடியில் வீடு இருக்கே!
ராஞ்சி: "எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வாரிசுளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர்" என பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்டில் பேசியுள்ளார். ஆனால், 2019 தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த போது காந்திநகரில் சொந்த வீடு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் மோடி.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில் இந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தியா கூட்டணி என இரு அணிகள் மோதுகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 13 தொகுதிகளிலும், AJSU கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 5 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், சிபிஐ (எம்எல்)(எல்) ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்திருப்பதால், பாஜக அணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.
பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் ஜார்க்கண்ட்டில் தீவிரமடைந்துள்ளது. ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி கல்பனா சோரன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி "மக்கள் அனைவரும் தங்கள் வாக்கின் மதிப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து ஊழல் செய்து வந்த காங்கிரஸ் அரசுக்கு பதிலடி கொடுத்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
எனக்கு சொந்தமாக ஒரு வீடு, சைக்கிள் கூட இல்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வாரிசுகளுக்காக ஊழல் செய்து பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர். நீங்கள் அனைவரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் பேரக் குழந்தைகளும் தான் என் வாரிசுகள். அவர்களுக்கு வளமான இந்தியாவை கட்டியெழுப்பி அளிப்பதே என் இலக்கு. கடந்த 25 ஆண்டுகளில் முதல்வராகவும், பிரதமராகவும் இருந்த என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.
இந்தியா கூட்டணி கட்சியினர் ஒரு ஆபத்தான விஷயத்தை கூறியுள்ளனர். இவர்கள் இப்போது எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி இடஒதுக்கீட்டை பறிக்க நினைக்கிறார்கள். நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது, இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று முடிவு செய்திருந்தனர். இப்போது காங்கிரஸ் கட்சி பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் இடஒதுக்கீட்டை கொள்ளையடித்து, மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க நினைக்கிறது" என விமர்சித்துப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
தனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை என ஜார்க்கண்ட் கூட்டத்தில் பேசியுள்ளார் பிரதமர் மோடி. ஆனால், கடந்த 2019 லோக்சபா தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, குஜராத் மாநிலம் காந்தி நகரில் ரூ. 1.10 கோடி மதிப்பில் சொந்த வீடு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications