போலி வங்கி அக்கவுண்டுகளில் ரூ.250 கோடி டெபாசிட்.. டெல்லி நகைக்கடைகளில் ஐடி ரெய்டு
டெல்லி: மத்திய டெல்லி பகுதியில் மூன்று நகைக் கடைகளில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில், பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
டெல்லியிலுள்ள கஸ்தூரிபா காந்தி மார்க் பகுதியிலுள்ள கோடக் மகேந்திரா வங்கியில் இன்று ஐடி துறை அதிரடி ரெய்டு நடத்தியது. அப்போது ரூ.36.4 கோடி அளவுக்கு ராதிகா ஜேம்ஸ் நிறுவனம் என்ற பெயரிலான கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதும், பிறகு இது என்.சி.ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் ஆக்சிஸ் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதும் தெரியவந்தது.

விசாரணையில் அக்கவுண்ட் பெயர் போலியானது என தெரியவந்தது. இதேபோல 8 போலி அக்கவுண்டுகள் அந்த வங்கியில் உருவாக்கப்பட்டு மேலும் பல கோடிகள் குவிக்கப்பட்டது தெரியவந்தது.
பண மதிப்பிழப்புக்கு பிறகு சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புக்கு நகைகளை விற்பனை செய்து போலி அக்கவுண்ட்டில் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருந்த 3 நகைக்கடைகள். எனவே சாந்தினி சவுக் பகுதியிலுள்ள அந்த மூன்று நகைக் கடைகளிலும் ஐடி துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications
