வாரணாசியில் மோடியை தோற்கடிப்பேன்: அரவிந்த் கேஜ்ரிவால் சபதம்
டெல்லி: வாரணாசி தொகுதியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தோற்கடிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
கிழக்கு டெல்லியில் ராஜ்மோகன் காந்தியை ஆதரித்து இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது கேஜ்ரிவால் பேசியதாவது:
எங்களுடைய இலக்கு நாடாளுமன்றத்துக்குள் நுழைவதுதான். அதற்காகவே வாரணாசியில் போட்டியிடுகிறோம். நான் மோடியை தோற்கடிக்க விரும்புகிறேன். அதனால்தான் வாரணாசியில் போட்டியிடுகிறேன்.

அதேபோல் அமேதியில் ராகுலைத் தோற்கடிக்க வேண்டும். அதற்காகவே குமார் விஸ்வாஸை களமிறக்கியுள்ளோம். மோடியும் ராகுலும் தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்கள்தான் இரண்டு மிகப் பெரிய ஊழல் கட்சிகளின் தலைவர்கள்..
பாரதிய ஜனதா ஊழல்வாதி எதியூரப்பாவை வேட்பாளராக நிறுத்துகிறது... ஆனால் ஆம் ஆத்மியோ காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியை களமிறக்கியுள்ளது. இதுதான் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்குமான வேறுபாடு.
எந்த ஒருகாலத்திலும் நான் எந்த ஒரு கட்சியிலும் சேருவதாக சொன்னதே இல்லை. குஜராத்திலும் ஹரியானாவிலும் என் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.. வாரணாசியில் முட்டைகளை வீசினார்கள்..
இந்த சம்பவங்களுக்கு பாஜகவும் காங்கிரஸும்தான் பொறுப்பு. அவர்கள் நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள்.. ஆனால் நாம் ஊழலை ஒழிக்கும் வரை போராடுவோம்.
இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.
முன்னதாக கிழக்கு டெல்லியின் கீதா காலனி என்ற பகுதியில் கேஜ்ரிவாலுக்கு எதிராக கறுப்புக் கொடிகள் காட்டப்பட்டு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications