மசூதின் இடதுகை.. ஜேஇஎம் தளபதி.. கொல்லப்பட்ட ''டெரர்'' யூசுப் அசார்.. பகீர் கதை!
இந்திய விமானப்படையால் கொல்லப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி யூசுப் அசார், உலகின் மிக முக்கியமான தீவிரவாதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

காஷ்மீர்: இந்திய விமானப்படையால் கொல்லப்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி யூசுப் அசார், உலகின் மிக முக்கியமான தீவிரவாதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்திய விமான படைக்கு மிக முக்கியமான நாள். பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இந்திய விமானப்படை அதிரடி காட்டி இருக்கிறது.
இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கியமான தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதல் பாகிஸ்தான் தரப்பை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

மைத்துனர்
இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் மைத்துனன் யூசுப் அசார் கொல்லப்பட்டார். பாலகோட் தீவிரவாத முகாமில் போடப்பட்ட குண்டில் யூசுப் அசார் கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த தாக்குதலில் இதேபோல் 200-300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.

அசார் உறவினர்கள்
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் உறவினர்களை இந்தியா கடந்த சில வருடங்களாக குறி
வைத்து கொன்று வருகிறது. 2017ல் அசாரின் மருமகன் தால்ஹா ரஷீத் கொல்லப்பட்டார். அதே போல் 2018ல் மசூத்தின் இன்னொரு உறவினரான உஸ்மான் கொல்லப்பட்டார். இடையில் அவனுக்கு தூரத்து உறவினர்கள் பலர் கொல்லப்பட்டனர். தற்போது யூசுப் கொல்லப்பட்டு இருக்கிறார்.

யூசப் செல்ல பெயர்
யூசுப் அசார் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தீவிர தன்மையை பார்த்து, அந்த அமைப்பில் எல்லோரும் ''உஸ்தாத் காரி'' என்றுதான் அழைத்து இருக்கிறார்கள். மசூத் அசாரை அடுத்து மிக முக்கியமான தலைவன், இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முகாம்களின் தலைவன்
யூசுப் சொந்தமாக நான்கு முகாம்களை நடத்தி வந்திருக்கிறார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பாலகோட், சகோதி, முசாபராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை இவர்தான் கட்டுப்படுத்தி வந்து இருக்கிறார். பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் நான்கு முக்கிய தீவிரவாத முகாம்கள் இவை.

தனிக்காட்டு ராஜா
இங்குதான் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. தனிக்காட்டு ராஜா என்ற சொல்லுக்கு இவன் மிக சரியாக பொருந்த கூடியவன். தாக்குதல் நடைபெற்ற இடங்களில் ஒன்றான பாலகோட், தனியாக மலைகள் சூழ்ந்து இருக்கும் காடு ஆகும். இங்கு ஜெய்ஷ் இ முகமதுவின் சாம்ராஜ்யத்தை மிக தனியாக நடத்தி வந்து இருக்கிறார் யூசுப்.

கந்தகார் விமான கடத்தல்
1999ல் நேபாளில் இருந்து டெல்லி வந்த போது கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 (Indian Airlines Flight 814) கந்தகாரில் கடைசியாக தரையிறக்கப்பட்டது. இந்த கடத்தலில் முடிவில்தான், அப்போதைய பாஜக அரசு, சிறையில் இருந்த மசூத் அசாரை விடுதலை செய்தது. இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் யூசுப் அசாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக முக்கிய புள்ளி
அதேபோல் புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்களை பலி வாங்கிய தாக்குதலுக்கும் இவர் முக்கிய மூளையாக செயல்பட்டு இருக்கிறார் என்கிறார்கள். இந்த நிலையில் யூசுப் அசார் கொலை செய்யப்பட்டது மிக முக்கியமான ராணுவ நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications