தண்ணீர் நீல நிறமாக மாறினால் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்- டெல்லி புராரி சம்பவத்தில் பரபரப்பு
தண்ணீர் நீல நிறமாக மாறினால் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்று டெல்லி புராரி சம்பவத்தில் எழுதப்பட்டிருந்தது.
Recommended Video

டெல்லி: தூக்கில் தொங்குவதற்கு முன் அனைவருக்கும் முன்பும் ஒரு கப் நீர் வைக்கப்பட வேண்டும். அது நீல நிறமாக மாறினால் நீங்கள் காப்பாற்றப்படுவீர் என்று டெல்லி புராரி சம்பவத்தில் எழுதப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இவர்களது மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வாரமாக நடந்து வரும் விசாரணையில் இதுவரை மரணத்துக்கான உறுதியான காரணம் தெரியாததால் போலீஸார் திணறி வருகின்றனர்.

தந்தையின் சொல்படி
அந்த வீட்டில் உள்ள மூதாட்டி நாராயண் தேவியின் மகன் லலித் பாட்டியா 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தை போல் சில செயல்களில் ஈடுபட்டார். திடீர் திடீர் என அவரது குரலில் பேசி அனைவரையும் வியக்க வைப்பார். இறைவனின் தீட்சயை பெற இதுபோல் செய்ய வேண்டும் என்று மற்ற உறுப்பினர்களுக்கு லலித்தான் கூறியுள்ளார்.

இந்தி பாடலுக்கு டான்ஸ்
இதுவரை 11 டைரிகள் கிடைத்துள்ளன. இவற்றில் உள்ள விஷயங்கள் லலித் பாட்டியா 11 ஆண்டுகளாக சொல்லி சொல்லி அதை மணப்பெண் பிரியங்கா எழுதியுள்ளார். இறப்பதற்கு முன்னர் பிரியங்காவின் திருமண நிச்சயதார்த்தத்தில் இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் ஆடிய டான்ஸை குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.

நீல நிறம்
இறுதியாக கிடைக்கப்பெற்ற டைரியில் "ஒரு கப் தண்ணீர் வையுங்கள். அது நீல நிறமாக மாறும். அப்போது நான் தோன்றுவேன் உங்களை காப்பாற்றுவேன். பூஜை முடிந்த பிறகு கட்டுகளை அவரவர் அவிழ்த்துக் கொள்ள வேண்டும் என்று எழுதியிருந்தது.

நாராயணின் மகன்
இறப்பதற்கு முன்னர் வீட்டில் வளர்த்து வந்த நாயை நாராயணின் மகன் புவனேஷ் சிறிது நேரம் நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. 11 பேருக்கு இறுதி சடங்குகளை உறவினர் பிரியங்கா சுண்டாவாட் செய்வார் என்று தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications