வேகமாக பாய்ந்த கான்வாய்.. சட்டென வந்த ஆம்புலன்ஸ்..வழிவிட்டு ஒதுங்கிய பிரதமர் மோடி!குவியும் பாராட்டு
காந்திநகர்: குஜராத்தில் பிரதமர் மோடியின் கான்வாய் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக நிறுத்தப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்து உள்ளது.
குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. அங்குக் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் வலுவாக உள்ள நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக முன்னெடுத்து உள்ளன. ஆம் ஆத்மியும் இந்த முறை குஜராத்தில் காலூன்ற முயல்கிறது.

குஜராத்
இந்தச் சூழலில் குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு சூரத், பாவ்நகர், அகமதாபாத் நகரங்களில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். குறிப்பாக முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலான வந்தே பாரத் சிறப்பு ரயிலையும் கொடி அசைத்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இது தவிர அகமதாபாத்தில் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

பிரதமர் கான்வாய்
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் சென்று கொண்டு இருக்கும் போது, பிரதமர் நரேந்திர மோடியின் கான்வாய் குஜராத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்காகப் பிரதான சாலையிலேயே நிறுத்தப்பட்டது. அகமதாபாத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர் காந்தி நகருக்குச் சாலை வழியாகத் திரும்பிக் கொண்டி இருந்தார். அந்தச் சமயத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பான வீடியோவை குஜராத் பாஜக தனது ட்விட்டரில் பகிர்ந்து உள்ளது.

ஆம்புலன்ஸ்
அதில் பிரதமர் மோடியின் கான்வாயில் இருக்கும் கருப்பு நிற வாகனம், ஆம்புலன்ஸ் செல்ல ஏதுவாக ஆமதாபாத்-காந்திநகர் சாலையில் ரோட்டின் இடது பக்கம் நகர்வது தெளிவாகத் தெரிகிறது. பிரதமரின் கான்வாய் பிரதான சாலையில் நிறுத்தப்பட்ட சமயத்தில், பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய காரில் இருந்து பாதுகாப்புப் படை வீரர்களும் இறங்கினர். பிரதமரின் இந்த செயலை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

என்ன நடந்தது
பிரதமர் மோடியின் பயணத் திட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதால் பிரதமர் வருகையால் அப்பகுதியில் போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டு இருந்தது. நோயாளி ஒருவர் உள்ளே இருந்ததால், அவசரமாக அங்கு வந்த ஆம்புலன்ஸ் மட்டும் அந்த சாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பிரதமரின் கான்வாயை அந்த ஆம்புலன்ஸ் தாண்டி செல்வதும் தெளிவாகக் காண முடிகிறது.

பிரதமர் மோடி
இந்த வீடியோவை குஜராத் பாஜக தனது பக்கத்தில் பகிர்ந்து, உண்மையான தலைவர் என்ற ரீதியில் பதிவிட்டு உள்ளது. அகமதாபாத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி காந்தி நகர் ராஜ்பவனுக்கு திரும்பிக் கொண்டு இருந்த போது இந்தச் சம்பவம் டந்து உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி இன்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்,
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications