Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்னியை பரிசோதிக்க முற்பட்டபோது அடுத்தடுத்து சந்தித்த சவால்கள்... கூறுகிறார் கலாம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய கடைசி நூல் நவம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளது.

அப்துல் கலாமும், அவருடைய முன்னாள் உதவியாளர் ஸ்ரீஜன்பால் சிங் ஆகியோர் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளனர். அந்த நூலின் பெயர் "Advantage India, From Challenge to Opportunity".

தற்போது இந்த நூல் ஆர்டரின் பேரில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த நூலை ஹார்ப்பர் காலின்ஸ் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ. 299 ஆகும்.

இந்த நூலில் சவால்களை எப்படி நேர் கொள்ள வேண்டும், அதை வைத்து எப்படி தேச வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்பது குறித்து விளக்கியுள்ளார் கலாம்.

அந்த நூலிலிருந்து...

அந்த நூலிலிருந்து...

இந்த நூலில் அக்னி ஏவுகணை திட்டம் குறித்து விளக்கியுள்ளார் கலாம். அக்னி ஏவுகணையை சோதித்துப் பார்ப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள், நெருக்கடிகள், அதன் மாதிரியை வெளிநாட்டில் சோதித்துப் பார்க்க முடிவெடுத்தபோது எழுந்த எதிர்ப்புகள் உள்ளிட்டவற்றை அவர் விளக்கியுள்ளார்.

20 கிலோ அக்னி

20 கிலோ அக்னி

"அக்னி ஏவுகணை மாதிரியின் மொத்த எடையே 20 கிலோதான். அதை எளிதாக கொண்டு செல்லக் கூடியதாக வடிவமைத்திருந்தோம். அந்த ஏவுகணையை ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் உள்ள ஒரு ஹைப்பர்சானிக் சுரங்கத்தில் வைத்து சோதித்துப் பார்க்க முடிவு செய்து 7 பேர் கொண்ட குழுவையும் ஸடட்கார்ட்டுக்கு அனுப்பி வைத்தோம்.

4 நாளில் முடிக்கத் திட்டம்

4 நாளில் முடிக்கத் திட்டம்

ஸ்டட்கார்ட்டுக்குக் குழு சென்றடைந்த 4 நாட்களுக்குள் சோதனையை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நமக்கு நேரம் மிக முக்கியமானதாக இருந்தது. எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

ஜெர்மனி போட்ட திடீர் தடை

ஜெர்மனி போட்ட திடீர் தடை

ஆனால் சோதனை தொடங்கியதுமே அதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம், ஜெர்மனி அரசு ஏவுகணைத் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால். அந்த ஒப்பந்தத்தின்படி நம்மைப் போன்ற வளரும் ஏவுகணை நாடுகளுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் செய்யக் கூடாது என்பதால் நமது சோதனையை நிறுத்த உத்தரவிட்டது ஜெர்மனி.

ஏமாற்றத்துடன் திரும்பினோம்

ஏமாற்றத்துடன் திரும்பினோம்

இந்த தடை காரணமாக நமது குழு ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. மேற்கத்திய நாடுகளிடம் கெஞ்ச நாம் விரும்பவில்லை. ஜெர்மனியிடம் மட்டும் சற்று பேசிப் பார்த்தோம். ஆனால் பலன் இல்லை. இதனால் அக்னி திட்டம் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டது.

நமக்கு நாமே

நமக்கு நாமே

இதையடுத்து இந்தியாவுக்குள்ளேயே இதுதொடர்பான தொழில்நுட்ப அடிப்படைக் கட்டமைப்பு குறித்து ஆராயத் தொடங்கினோம். நம்மிடமே இதற்கான விடை உள்ளதா என்று ஆராய்ந்தோம்.

நாம்தான் செய்ய வேண்டும்

நாம்தான் செய்ய வேண்டும்

அக்னி ஏவுகணை நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்பதை அறிந்திருந்தோம். நமக்கான ஏவுகணை இது என்பதால் இது வெற்றி பெற வேண்டியதும் நமது பொறுப்புதான் என்பதை உணர்ந்தோம். கடுமையான நெருக்கடி ஏற்பட்ட அந்த நிலையில்தான், நாம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக தீர்வும் நமக்குக் கிடைத்தது.

பெங்களூரில் கிடைத்த வெளிச்சம்

பெங்களூரில் கிடைத்த வெளிச்சம்

இதையடுத்து கம்ப்யூட்டேஷனல் ப்ளூயிட் டைனமிக்ஸ் (CFD) துறையில் முன்னோடியான பேராசிரியர் எஸ்.ஆர். தேஷ்பாண்டேவின் உதவியால் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் அக்னிக்குப் புத்துயிர் கொடுக்கும் முயற்சியைத் தொடங்கினோம்.

10 பேர் கொண்ட குழு

10 பேர் கொண்ட குழு

ஹைதாபாத் டிஆர்டிஎல்லைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு பெங்களூரு வந்தது. அவர்கள் தேஷ்பாண்டேவுடன் இணைந்து அக்னி ஏவுகணைத் திட்டத்திற்குத் தேவையான CFDயை உருவாக்கும் பணியில் இறங்கினர்.

இன்னொரு இடையூறு

இன்னொரு இடையூறு

இந்த நிலையில் இன்னொரு தடங்கலையும் நாம் சந்திக்க நேரிட்டது. CFDயை நாம் உருவாக்கியபோது, அதற்கு மிகவும் அதிக சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்கள் தேவைப்பட்டன. ஆனால் நம்மிடம் அதற்குத் தேவையான மெயின்பிரேம் கம்ப்யூட்டர்கள் இல்லை. அதை வாங்குவதற்கும் நேரம் இல்லை. மேலும் நமக்கு எந்த நாடும் உதவாது என்ற நிலை வேறு.

உருவானது புதிய முறை

உருவானது புதிய முறை

இதையடுத்து தேஷ்பாண்டே குழுவினர் இணைந்து "kinetic energy split methodology" முறையை உருவாக்கினர். இந்த நேரத்தில் நமக்கு பிருத்வி ஏவுகணை சோதனையின்போது ஏற்படுத்தப்பட்ட டேட்டாக்கள் கை கொடுத்தன.

பிருத்வியை வைத்து வளர்ந்த அக்னி

பிருத்வியை வைத்து வளர்ந்த அக்னி

பிருத்வி சோதனையின்போது கிடைத்த ரியல் பிளைட் டேட்டாக்களை வைத்து அக்னிக்குத் தேவையான மாற்றத்தை நாம் செய்ய முடிந்தது. பிருத்வி சோதனைக்குப் பயன்படுத்தப்பட்ட அதே அல்காரிதத்தைப் பயன்படுத்தி அக்னிக்கு அதற்கேற்ப மாற்றி பரிசோதித்தோம். நமக்குத் தேவையான CFD முடிவுகள் கிடைத்தன. பின்னர் இதையும், பிருத்வி டேட்டாவையும் பரிசோதித்தபோது இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தது. இது எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. நாம் நினைத்ததும் வெற்றிகரமாக நடந்தது என்று கூறியுள்ளார் கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+