பிடன் வந்ததும் செம டிவிஸ்ட்.. எல்லையில் பின்வாங்க ஓகே சொன்ன சீனா.. 6 மாதத்தில் முதல்முறை.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

லடாக்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்து பிடன் பொறுப்பேற்க உள்ள நிலையில்.. லடாக் எல்லையில் சீனாவும் மனமாற்றம் அடைந்துள்ளது. எல்லையில் பெரிய அளவில் படைகளை வாபஸ் வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் கடந்த மே மாதம் 5ம் தேதியில் இருந்து நடந்து கொண்டு இருக்கிறது. கல்வான் மோதல், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் என்று லடாக் மோதல் இடையில் கொஞ்சம் விஸ்வரூபம் எடுத்தது.

அதன்பின் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், தொடர் ஆலோசனைகள் மூலம், லடாக்கில் கொஞ்சம் அமைதி திரும்பியது. ஆனால் சீனா படைகளை மட்டும் வாபஸ் வாங்க மறுத்தது. படைகளை வாபஸ் வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் எதையும் சீனா மதிக்கவில்லை.

 வாபஸ்

வாபஸ்

இந்த நிலையில்தான் எல்லையில் படைகளை வாபஸ் வாங்க சீனா ஒப்புக்கொண்டு உள்ளது. அதோடு பீரங்கிகள், ஆயுதங்களை எல்லையில் இருந்து எடுத்து செல்லவும் சீனா ஒப்புக்கொண்டு உள்ளது . நேற்று நடந்த கமாண்டர் லெவல் பேச்சுவார்த்தையில் சீனா இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. 8வது கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில்.. சீனா படைகளை வாங்க சம்மதம் தெரிவித்து உள்ளது.

மூன்று படிகள்

மூன்று படிகள்

இதற்காக மூன்று படிநிலைகளை சீனா - இந்தியா மேற்கோள்ள இருக்கிறது. முதல் படிநிலையின்படி லடாக் எல்லையில் இருந்து ஆயுதங்கள், வாகனங்கள், பீரங்கிகள் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். மொத்தமாக கூடாரங்களை கலைக்க வேண்டும். இரண்டாவதாக.. பாங்காங் திசோவில் கட்டுப்பாட்டு பகுதி 8 வரை இந்தியாவை ரோந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.

 இந்தியா பின்வாங்கும்

இந்தியா பின்வாங்கும்

இந்தியா இங்கு முழுமையாக ரோந்து பணிகளை செய்யும். இதற்கு பதிலாக இந்தியா பாங்காங் திசோவில் இருக்கும் பல்வேறு மலைகளில் இருந்து பின்வாங்கும். அதேபோல் கட்டுப்பாட்டு பகுதி 4-8 இடையே இருக்கும் சிறிய பகுதியில் இருந்து இரண்டு ராணுவ தரப்பும் வெளியேறும். இந்த பகுதியை மொத்தமாக ரோந்து மேற்கொள்ளாத பகுதியாக அறிவிக்க உள்ளனர்.

மூன்றாவது

மூன்றாவது

கடைசியாக இரண்டு ராணுவ தரப்பும், தங்கள் வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் , என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது . இந்த மூன்று கோரிக்கைக்கும் சீனா ஒப்புக்கொண்டுள்ளது. மொத்தமாக படைகளை வாபஸ் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. அதோடு இப்போதே சீனா தனது பீரங்கிகள் எல்லையில் இருந்து எடுத்து செல்ல தொடங்கிவிட்டது.

6 மாதம்

6 மாதம்

6 மாதங்களில் சீனா எப்போதும் முதல் ஆளாக இப்படி படைகளை வாபஸ் வாங்கியது இல்லை. ஆனால் முதல்முறையாக சீனா இப்படி அடக்கமாக செல்ல முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் பிடன் வென்று இருக்கிறார்.. அமெரிக்கா இஸ் பேக் என்று வலுவான மெசேஜ் வேறு அவர் அளித்துள்ளார். உலக நாடுகளின் பிக்பாஸாக மீண்டும் அமெரிக்கா முயன்று வருகிறது.

கறார்

கறார்

பிற நாட்டு பிரச்சனையில் பிடன் மிகவும் கறாரான மனிதர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில்தான் எல்லையில் வாலாட்டிய சீனா கொஞ்சம் அடக்கி வாசிக்க தொடங்கி உள்ளது. பிடனின் நிலைப்பாட்டை தெரிந்து கொண்டு .. வரும் காலத்தில் சீனா எல்லை பிரச்சனையில் தனது முடிவுகளை மாற்ற வாய்ப்புகள் உள்ளது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+